ப்ளடி பெக்கர்: திரைப்பட விமர்சனம்

வேலை செய்ய விம்பாமல் பிச்சை எடுத்து பிழைப்பை ஓட்டும் ஒருவன், எதிர்பாராமல் பிரம்மாண்டமானன பங்களாவில் சிக்கிக்கொள்கிறான். அங்கே அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அங்கிருந்த இன்னும் சிலரும் வரிசையாக கொல்லப்படுகிறார்கள்.
அதன் பிறகு என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான த்ர்லராக சொல்லி இருக்கிறார்கள்.
அட..கவின்தானா இது?
பரட்டைத்தலை, அழுக்கு உடை என அடையாளமே தெரியாத வகையில் அசல் பிச்சைக்காரனாகவே தோற்றம் அளிக்கிறார். தோள்களை சற்றே உயர்த்தி நடக்கும் வித்தியாசமான நடை, திக்கும் வாய்ஸ் மாடுலேசன் என அசத்தி இருக்கிறார் மனிதர்.
ஜாலியாக யாசகம் கேட்பது, பங்களாவில் சிக்கிக்கொண்டு அச்சத்தில் தவிப்பது, மனைவியை பறிகொடுக்கும் பிளாஷ்பேக் காட்சியில் கதறுவது.. என அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கவின்.இதர கதாபாத்திரங்களில் வரும் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் என அனைவருமே தங்கள் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்கள்.
படத்தில் வரும் அந்த ப ங்களாவில்தான் பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. அதை சிறப்பாக அமைக்க, கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை, ஒளிப்பதிவாளர் சுஜித் சரங் கூட்டணி கடுமையாக உழைத்து இருக்கிறது. அதே போல எடிட்டர் நிர்மல் கூட்டணி, இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் அனைருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து இருக்கின்றனர். அதே போல ஆடை வடிவமைப்பாளர் ஜெய் சக்தியும் பாராட்டுக்கு உரியவர்.பிச்சை எடுக்கும் கவனின் கலாட்டா காட்சிகளாக படம் துவங்குகிறது.. மெல்ல மெல்ல அது த்ரில்லராக மாறுகிறது. இந்த காட்சிகளினூடே புன்னகைக்க வைக்கும் காமெடிகளை மெலிதாக நுழைத்து இருக்கிறார் இயக்குநர்.
காமெடி, த்ரில்லர் என்றாலும் பிளாஷ்பேக் காட்சியில் சென்ட்டிமெண்டாடக டச் செய்துவிடுகிறார் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்..
மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.