கல்விக் கொள்ளையரை எதிர்க்கும் விஜய்! வரும் ஜன 1ல் ‘பைரவா’ ரீ ரிலீஸ்!
தமிழக முதல்வர் விஜய் நடித்த பைரவா திரைப்படம், வரும் ஜனவரி 1ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம், 116 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இது விஜயின் மணி விழா படமாகும். அதாவது 60 வது படம்! அதோடு பால்டிக் நாடுகளான லிதுவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளில் வெளியான முதல் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது. அந்த நாடுகளில் கல்வி பயில தமிழ் நாட்டில் இருந்து சில நூறு பேர் செல்வது உண்டு. அவர்களது முயற்சியில பைரவா திரைப்படம் சிறப்புத் திரையிடாலாக வெளியானது.
பி. நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில்,பரதன் இயக்கத்தில்பிரமாண்டமாக உருவானது பைரவா. இப்படத்தில், கல்விக்கொள்ளையர்களை எதிர்க்கும் புரட்சியாளராக விஜய் தோன்றி ரசிகர்களை ஈர்த்தார்.
இப்படத்தின் இயக்குநர் பரதன், ஏற்கெனவே, விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவர். தவிர, விக்ரம் நடித்த , ‘தூள்’, விஜய் நடித்த ‘கில்லி’, ‘மதுர’ , அஜித் நடித்த “வீரம்” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தின் ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘பா பா’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.
2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான ஐந்து முதல் ஆறு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இதன் மூலம் விஜய்யின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘பைரவா’ இடம்பெற்றது.
திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. தொலைக்காட்சிகளில் ‘பைரவா’ ஒளிபரப்பாகும்போதெல்லாம் கிடைக்கும் அதிகப்படியான பார்வையாளர் வரவேற்பும், டிஆர்பி எண்ணிக்கையும் இதற்குச் சான்றாக இருப்பதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரவேற்பு மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக, 2017-ல் இப்படம் வெளியானபோது குழந்தைகளாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது வளர்ந்து இளைஞர்களாகியுள்ள நிலையில், தங்களுக்குப் பிடித்தமான ‘பைரவா’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இந்த மறுவெளியீடு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதேபோல், அப்போது திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக அமையும்.
இப்படத்தினை SIM Cine International நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
2027 புத்தாண்டின் முதல் நாளை விஜய்யின் ‘பைரவா’ திரைப்படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்!

