மேடையில் அருவெறுப்பாக பேசிய பாபா பாஸ்கர்!

மேடையில் அருவெறுப்பாக பேசிய பாபா பாஸ்கர்!

பி.வாசு இயக்கத்தில், ரஜினி நாயகனாக நடித்து 2005-ம் ஆண்டு வெளியானது ‘சந்திரமுகி’.  மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் பி.வாசு இயக்குகிறார்.

லைகா தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும்,  கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் தோன்றுகின்றனர்.

ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படத்தின் ஆடியோ விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.

யாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் பி.வாசு, நடிகர் ராகவாலாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

படத்தின் பாடல்களுக்கு கலைஞர்கள் மேடையில் சிறப்பாக ஆடினர். ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு, தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.

இப்படி சிறப்பாக நடந்த விழாவில், கரும்புள்ளியாக இருந்தது, ‘பாபா’ பாஸ்கர் நடவடிக்கை.

மேடையில் ‘அதீதமாக’ ஆடிய இவர், கூட்டத்தினரிடையே ஒருமையில் பேசினார். ஒரு கட்டத்தில் மிக அருவெறுப்பான வார்தத்யை வெளிப்படுத்தினார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் முகம் சுழித்தனர்.

“முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளும் சிறப்பான விழாவில் இப்படி பாபா பாஸ்கர் நடந்துகொள்கிறரே” என்று அனைவரும் ஆதங்கப்பட்டனர்.