‘பப்ளிகுட்டி’ ஐஸ்வர்யா!
டி.வி.சோமு சிறப்புப் பக்கம்:
சில நாட்களுக்கு முன் திரைப்பட நிகழ்வு ஒன்றி்ல் நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஐஸ்வர்யா என்பவரிடம் செய்தியாளர் மீரான் என்பவர், “நீங்கள் அணிந்திருப்பது கோடை காலத்துக்கு ஏற்ற உடையா” என்று கேட்டது சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அநத செய்தியாளரை கண்டித்தனர்.
உடனடியாக அவரை கண்டித்து எழுதியவர் நண்பர் பி.ஆர்.ஓ. கே.எஸ்.கே. செல்வா.
நானும் அந்த செய்தியாளரை கண்டித்து பதிவிட்டேன்.
சம்பந்தப்பட்ட தொகுப்பாளினி ஐஸ்வர்யாவும், தனது வலைப்பக்கத்தில் எழுதினார்.
அத்தோடு முடிந்தது.
நேற்று வேறு ஒரு திரைவிழாவில் நிகழ்ச்ச்சியைத் தொகுக்க வந்த அதே தொகுப்பாளினி மீண்டும் அந்த சர்ச்சையை கிளறினார்.
இது குறித்து நண்பர் கே.எஸ்.கே. செல்வா எழுதியது இது. இக்கருத்தில் எனக்கும் முழு உடன்பாடு!

“சகோதரி ஐஸ்வர்யாவிற்கு..
சமீபத்தில் நடைபெற்ற ‘அம்பி’ பட பிரஸ்மீட்டில் உங்கள் உடை பற்றிய மூத்த பத்திரிகையாளரின் கேள்விக்கு நான் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தேன். அந்த மூத்தப்பத்திரிகையாளர் என் அன்புக்குரியவர் என்ற போதும், அவர் கேள்வியில் நாகரிகம் இல்லாததால் என் கண்டனத்தை நாகரிகமாக செய்தேன். மேலும் பல பத்திரிகையாளர்கள் அவரை தனிப்பட்ட முறையில் கண்டனம் தெரிவித்தார்கள்.
அன்று அந்நிகழ்வில் நீங்கள் அவரின் கேள்விக்கு மிகவும் முதிர்ச்சியான எதிர்வினை செய்திருந்தீர்கள்..அதனால் தான் மக்கள் பலரும் உங்களோடு நின்றார்கள். அது அன்றே முடிந்து போயிற்று. நானும் அதைக் கடந்தும் மறந்தும் விட்டேன்.
ஆனால் நேற்று நடைபெற்ற ‘யோகிடா’ என்ற படவிழாவில் நீங்கள் அதைத் திரும்பவும் கிளறி இருக்க வேண்டாம் என்பது என் ஆணித்தரமான கருத்து. அன்று நடந்த நிகழ்வில் உங்கள் மேல் துளியும் தவறில்லை என்பதால் தான் முதல் கருத்தைப் பதிவு செய்த நான் உள்பட அனைத்து ஊடகமும் உங்கள் பக்கம் நின்றது.
ஆனால் நேற்று நீங்கள் நடந்து கொண்டது ஊடகத்துறைக்கு மட்டுமல்ல மக்களுக்குமே உகந்ததாக இல்லை. மேலும் நேற்று மேடையில் நான் அன்று பதிவு செய்ததைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஆனால் நான் யார் என்று தெரியவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். என்னை கண்டெடுக்க முடியவில்லை என்றீர்கள். அப்படியே இருக்கட்டும். எனக்கு பப்ளிசிட்டி தேவையில்லை.
ஒரு தவறு நடந்தது. அதற்கான எதிர்வினையும் கிடைத்துவிட்டது. மீண்டும் அதன்மூலம் பப்ளிசிட்டி தேட நினைப்பது… அதுவும் இன்னொருவர் செலவு செய்து நடத்தும் பிரஸ்மீட்டில் செய்ய நினைப்பது பாசிட்டிவ் அப்ரோஜ் அல்ல.
நல்லதை தொடருங்கள் நல்லது நடக்கும்.
PRO
# தனக்கு பப்ளிசிட்டி என்று தொகுப்பாளினியும், படத்துக்கு விளம்பரம் என படக்குழுவினரும் நினைத்து இருக்கிறார்கள்.
எல்லாம் பப்ளிகுட்டி செய்யும் வேலை! 
பின்குறிப்பு: ஐஸ்வர்யாவிடம், அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி குறித்து கண்டித்து முகநூலில் நான் பதிவிடும்போது, சம்பந்தப்பட்ட செய்தியாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தைத்தான் பதிவிட்டேன். தொகுப்பாளியின் பெயரைக்கூட பதிவிடவில்லை. அவரே பப்ளிகுட்டிக்குத்தான் அலைகிறார் என்கிறபோது, நம்மாலான அவரது படங்களை வெளியிடுவோமே என்றுதான் பதிவிட்டு உள்ளேன்.

