அக் 9- ல், ‘ஆல் பாஸ்’: தமிழ்த்திரையுலக வரலாற்றிலேயே வெட்டு குத்து இல்லாத வடசென்னையில் ஒரு ஜாலி கலாட்டா: முதல்முறையாக வெட்டு குத்து ஜாலியான வட சென்னை படம்!
தமிழ் சினிமாவில் வடசென்னையை மையமாகக் கொண்ட கதைகள் என்றாலே, ரத்தம், வெட்டு, குத்து, அடிதடி மற்றும் பகைக் கதைகள் போன்ற வன்முறைச் சம்பவங்களே வழக்கமாக இடம்பிடித்து வந்துள்ளன. ஆனால், அந்த வழக்கமான பாதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, வடசென்னையின் எதார்த்தமான வாழ்வியலோடு சேர்த்து முழுக்க முழுக்க ஒரு ஜாலியான குடும்பப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் “ஆல் பாஸ்”. வடசென்னை பின்னணியில் முதன்முறையாக இத்தகைய ஜாலியான கோணத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களைக் குதுகலப்படுத்தத் தயாராகியுள்ளது.
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா.ஆர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ளார்.
‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் மற்றும் ‘லியோ’ பட நடிகர் ஜனனி கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா.ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்ட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ புகழ் சரத் லோகித்ஷவா வில்லனாக மிரட்ட, ரோஷன் பஷீர் மற்றும் அருவி மதன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் சிரிக்க வைக்கின்றனர்.
இசை: ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு: ‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பு: ‘பசங்க’ பட புகழ் எஸ்.பாஸ்கர் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.
கலை & நடனம்: ஜெயசீலன்.T கலை இயக்கத்தையும், I.ராதிகா நடன இயக்கத்தையும் கையாண்டுள்ளனர். மெட்ரோ மகேஷ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் மைதீன் பேசும்போது, “இது ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த கதை. வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பகை, கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத, வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலையும் ஜாலியான தருணங்களையும் பேசும் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம். முழுப் படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே படமாக்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
வன்முறைச் சாயல் இல்லாத வடசென்னையின் கலகலப்பான பக்கங்களைச் சொல்லும் ‘ஆல் பாஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

