”சாடிஸ்ட் தனுஷ்!”: நயன்தாரா தாக்கு!

”சாடிஸ்ட் தனுஷ்!”: நயன்தாரா தாக்கு!

“நடிகர் தனுஷ்,  பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடுமைக்காரர்,  தனிப்பட்ட வெறுப்பினால் பழிவாங்குபவர், கீழ்த்தரமானவர், போலி மனிதர்” என்று கடுமையாக தாக்கி பகிரங்கக் கடிதம் வெளியிட்டு உள்ளார நடிகை நயன்தாரா.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில்  உள்ள பார்க் ஷெரட்டன் ஓட்டலில்  பிரம்மாண்ட திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக கடற்கரையை ஒட்டி கண்ணாடி மாளிகை போன்ற அரங்களுகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

நயன் தாராவின் திருமண உடைகள் பல லட்சங்கள். 20 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது. ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இத்திருமணத்திற்கு வந்திருந்தனர்.

நயன்தாராவின் திருமணத்தை நெட்பிலிக்ஸ் தனது ஓடிடி தளம், வெளியிட முடிவு செய்து அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. அதோடு, நயன்தாராவுக்கு ரூ.25 கோடி அளிப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் திருமணம் நடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் நெட்பிலிக்ஸில் அந் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. இதற்குக் காரணம் நடிகர் தனுஷ்தான் என்று தகவல் வெளியானது.

அதாவது தனுஷ் தயாரித்த நானும் ரவுடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா நடித்தார். அப்போதுதான் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. ஆகவே தங்களது திருமண வீடியோவில், அப்படத்தின் சில காட்சிகளை சேர்க்க நினைத்தனர். அதற்காக, தனுஷிடம் அனுமத கேட்டனர். அவர் இரு வருடங்களாக அனுமதிஅளிக்கவில்லை.

இந்நிலையில், குறிப்பிட்ட வீடியோவின் சில வினாடி பிரமோ வெளியானது. அதில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இருந்தன. இதையடுத்து தனுேஷ், ரூ. 10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.இந்நிலையில்தான், தனுஷூக்கு பகிரங்க கடிதம் எழுதி உள்ள நயன்தாரா, “பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடுமைக்காரர்,  தனிப்பட்ட வெறுப்பினால் பழிவாங்குபவர், கீழ்த்தரமானவர், போலி மனிதர்” என்றெல்லாம் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

(கடிதத்தில், ‘schadenfreude’ என்ற ஜெர்மன் வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் நயன்தாரா. இதற்கு, ‘பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்’ – ‘சாடிஸ்ட்’ என்று அர்த்தம்.)

அந்த கடிதம்…

Open Letter to D (Tamil)

 

 

 

 

 

 

 

 

 

Related Posts