‘மண்டாடி’ சூரியைப் பார்த்து திருந்துவார்களா ‘கீ’ரோக்கள்?

‘மண்டாடி’ சூரியைப் பார்த்து திருந்துவார்களா ‘கீ’ரோக்கள்?

நகைச்சுவை வேடங்களில் முத்திரை பதித்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய `விடுதலை’ படத்தில் கதை நாயகனாக மக்களின் மனதில் பதிந்தார். தொடர்ந்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ என கதை நாயகனாக தொடர்கிறார்.

இதையடுத்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.

இந்நிலையில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், `மண்டாடி’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடைமண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பங்களிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா செய்தியாளர் சந்திப்பில் சூரி பேசினார்.

அப்போது அவர், “இப்படத்தின் துவக்கத்திலேயே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவே பிரமாண்டாமாக நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ரொம்ப கொடுத்து வச்சவன். இது எல்லாத்துக்கும் காரணம் வெற்றிமாறன் அண்ணன்தான். எல்லா மேடைகளிலும் இதை நான் சொல்லுவேன்.

சுசீந்திரன் அண்ணன் எனக்கு வாய்ப்புக் கொடுத்து பல படங்களில் நடித்தேன். அதற்குப் பிறகு வெற்றிமாறன் அண்ணன் என் மீது வைத்த நம்பிக்கையில், அவர் கொடுத்த வாய்ப்பில் கதைநாயகனாக மாறியிருக்கிறேன்.

சம்பாரிச்ச பணம் போதும். இனிமேல் நல்ல படங்கள் மட்டும்தான்

பெயின்டராக இருந்து நடிகராக மாறி இதுவரைக்கு என் தகுதிக்கு மீறி நல்லா சம்பார்ச்சிட்டேன். இனி எனக்குப் பிடிச்ச மாதிரி, நல்ல நல்ல கதையுடன் படங்கள் பண்ணினா போதும்.

கலைத்தாய் எனக்கு வாய்ப்புகள் கொடுத்த நல்லா வச்சிருந்தாலே போதும். எல்ரெட் குமார் அண்ணோட திரும்ப திரும்ப வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷம்.

எல்லா படத்திலும் துணையாக நிற்கிறார் வெற்றிமாறன் அண்ணன்

‘விடுதலை’ வெற்றிமாறன் அண்ணனால சிறப்பாக அமைஞ்சது. அதுக்கு அப்றம் ‘கருடன்’ படமும் அவர் மூலமாக, அவரோட நிறைய பங்களிப்பில் சிறப்பாக அமைஞ்சது.

இப்போது இந்தப் படமும் அவர் மூலமாக, அவரோட பங்களிப்பில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு எப்பவும் துணையாக இருக்கார் வெற்றி அண்ணன்” என்றார் சூரி.

பல நூறு கோடி சம்பாதித்த பிறகும், கமர்சியல் என்ற பெயரில் மசாலாவை ரசிகர்கள் தலையில் திணிக்கும் ஹீரோக்களிடையே, “சம்பாதிச்சது போதும்.. இனி நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்” என்கிறார் சூரி.

இவரைப் பார்த்தாவது அவர்கள் திருந்தவேண்டும்!

Related Posts