‘லாஸ்ட் மேன் இன் டவர்’: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா, போமன் இரானி நடிப்பில் நவ 6 முதல் ZEE5-ல்!
மும்பையின் மூலைமுடுக்குகளில் எழும் ஒவ்வொரு புதிய கட்டடக் கூரையின் பின்ேயும், வேரறுந்துபோன எத்தனையோ மனிதர்களின் கண்ணீர்க் கதைகள் புதைந்து கிடக்கின்றன! அரவிந்த் அடிகாவின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் பென் ரேகி இயக்கத்தில், ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள மிரட்டலான திரில்லர் திரைப்படம் தான் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ (Last Man in Tower). நவம்பர் 6-ம் தேதி அன்று ஹிந்தி ZEE5 ஓடிடி தளத்தில் டிஜிட்டல் பிரீமியராகக் களமிறங்கும் இப்படம், நடுத்தர வர்க்கத்தின் அடிவயிற்றுத் தீயைப் பற்ற வைக்க வருகிறது!
படத்தின் கதைக்களம் அனல் பறக்கிறது. மும்பையின் பழைய அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி. ஒட்டுமொத்த அண்டை வீட்டாருக்கும் கோடிக்கணக்கில் பணம் கொட்டப் போகும் பிரம்மாண்டமான மறுமேம்பாட்டுத் திட்டம் (Redevelopment Project). அனைவரும் குதுகலமாய் கையெழுத்திட, ஒரே ஒரு மனிதர் மட்டும் மதில் மேல் பூனையாக அல்ல, உறுதியான மலையாகக் குந்துகிறார்! அவர்தான் ஓய்வுபெற்ற இயற்பியல் ஆசிரியர் யோகேஷ் மிஸ்ரா – மனோஜ் பாஜ்பாய்! தான் நேசிக்கும் வீட்டை, தன் நினைவுகளின் உறைவிடத்தைக் காக்க அவர் நடத்தும் தனிதனி மனிதப் போராட்டம் தான் படத்தின் சூடு பறக்கும் மைக்க்கதை!
பணத்தாசைக்கும் பாசத்துக்கும் இடையே நடக்கும் இந்த மோதலில், பிய்ந்துபோன பந்தங்களை வெட்டி எறியத் துடிக்கும் கட்டுமானத் திட்ட மேம்பாட்டாளராக போமன் இரானி மிரட்டுகிறார்! மறுபுறம், தன் சிறப்புத் தேவைகள் கொண்ட மகனின் எதிர்காலத்துக்காக எதையும் செய்யும் துணிச்சலோடு களம் காணும் சங்கீதா பூரியாக திவ்யா தத்தா அனல் பறக்க விடுகிறார்! நட்பு முறியும், நல்லுறவுகள் நசுங்கும், மனித மனங்களின் ஈவு இரக்கமற்ற சுயநல முகங்கள் சட்டென வெளிப்படும் விதம் சிலிர்க்க வைக்கிறது.
“வீடு என்பது வெறும் நான்கு சுவர்களா அல்லது நினைவுகளின் கூடாரமா?” என்ற ஆழமான தத்துவக் கேள்வியோடு, ஒரு தனிமனிதனின் கொள்கைக்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் பேராசைக்கும் இடையேயான யுத்தத்தை அப்பட்டமாகப் பேசுகிறது இப்படம். வரும் நவம்பர் 6-ம் தேதி ZEE5-ல் திரையேறும் இந்த அதகள படைப்பைத் தவறாமல் கண்டு களியுங்கள்!

