”எல்லா வட்டங்களையும் உடைத்தெறிந்துவிட்டு வந்திருக்கும் புதுமையான படைப்பு!”: ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ விழாவில் பகத்பாசில்!

”எல்லா வட்டங்களையும் உடைத்தெறிந்துவிட்டு வந்திருக்கும் புதுமையான படைப்பு!”:  ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ விழாவில் பகத்பாசில்!

ஃபஹத் பாசில் நடிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில், எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி டிரபுள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் பட்டையைக் கிளப்பியுள்ளது! அக்டோபர் 2-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் விழாவில் திரைப்பிரபலங்கள் பேசிய சுவாரஸ்யமான துள்ளல் நடைப் பார்வை இதோ:

சக்திவேலன் (விநியோகஸ்தர்)

”ஹாலிவுட்டில் டைனோசர்களை வைத்து பிரம்மாண்டத்தைக் காட்டினார்கள்; ஆனால், நம் ஊரிலிருந்து ‘ஈ’யை வைத்து உலகையே மிரளவிட்டவர் ராஜமௌலி! அந்தச் சக்ரவர்த்தியின் முத்திரையோடு வரும் படம் இது. ஃபஹத் பாசிலின் மிரட்டலான நடிப்பும், குடும்பங்கள் கொண்டாடும் கதையும் சேர்ந்து தியேட்டரை தெறிக்கவிடப் போவது உறுதி!”

எஸ்.எஸ். கார்த்திகேயா (தயாரிப்பாளர்)

”இது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. ராஜமௌலி சார் சொன்னது போல், பட்ஜெட்டைத் தாண்டி ஒவ்வொருவர் மனசையும் தொடும் எமோஷன் இப்படத்தில் இருக்கு. பேபி சாராவின் மேஜிக் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. அக்டோபர் 2-ல் குடும்பத்துடன் வந்து தியேட்டரை அதிர விடுங்கள்!”

பிரவீண் ஆண்டனி 

”ஆர்.ஆர்.ஆர் டீசர் மூலமாகத்தான் இந்தக் கூட்டணியுடன் இணைந்தேன். கார்த்திகேயா எதிலும் காட்டும் துல்லியம் என்னை வியக்க வைத்தது. திரைக்கதையை விட 200 சதவீதம் நேர்த்தியாக இப்படத்தை செதுக்கியிருக்கிறார்கள். ஃபஹத்தும் சாராவும் திரையில் நிகழ்த்தும் லூட்டி எல்லாரையும் ரசிக்க வைக்கும்!”

பேபி சாரா 

”ஆப்ரா கா ஷாப்ரா! வணக்கம் சென்னை. இப்படத்தில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சூரி தான் என் பெஸ்ட் ஃபிரண்ட். ஒரு மேஜிக்கல் உலகத்திற்கு உங்களை அழைக்கிறோம். காந்தி ஜெயந்தியன்று தியேட்டரில் சந்திப்போம்!”

எஸ்.எஸ். ராஜமௌலி  

”படத்தின் டீசருக்கு குரல் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், சூர்யாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இயக்குநர் ஷஷாங்க் என்னிடம் ஒரே வரியில் ‘பேயைக் கடத்திய மனிதன்’ என்று கதை சொன்னபோதே என்னை ஈர்த்துவிட்டது. ஃபஹத் பாசில் இந்தப் படத்தின் அசல் ‘ராஸ்கல்’! சாராவும் அவரும் மோதும் சண்டை தியேட்டரில் சிரிப்பலையை எழுப்பும். பேத்தி முதல் பாட்டி வரை அனைவரும் ரசிக்கும் படம் இது!”

ஃபஹத் பாசில்

”கார்த்திகேயா போனில் இரண்டு கதைகள் அனுப்பினார். இரண்டையுமே கேட்டுவிட்டு இரண்டுலேயும் நடிக்கிறேன்னு சொன்னேன். அப்போதான் சொன்னார், ‘இத ராஜமௌலி சார் வழங்குறார்’னு! எனக்கு தெலுங்கில் பெரிய ஓபனிங் இருந்ததில்லை; அதை இந்தப் படம் மாற்றிவிடும். சூர்யா அண்ணா இந்த விழாவிற்கு வந்திருப்பது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. இதுவரை நான் பார்த்திராத, நடிக்காத ஒரு புதுமையான கதை இது. சாராவுடன் நடிச்சது மறக்க முடியாத அனுபவம்!”

சூர்யா 

”தெலுங்கு மாநிலங்களின் விருந்தோம்பல் எப்போதும் தனி அழகு. ஃபஹத் பாசில் – ராஜமௌலி – கார்த்திகேயா கூட்டணி இப்படி ஒரு படத்தைத் தரும்னு யாருமே நினைச்சிருக்க மாட்டோம். ஃபஹத் எப்போதும் எந்த ஒரு வட்டத்திற்கும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் யோசித்து நடிக்கும் கலைஞர். பெரியவர்களுக்கான குழந்தைப் படமாக இது வந்துள்ளது. ராஜமௌலி சார் இந்திய சினிமாவிற்கு உலகளவில் அடையாளம் தந்துள்ளார். அக்டோபர் 2-ல் அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்!”

Related Posts