‘என்ன விலை’: சாம் சி.எஸ். இசையமைத்த பட ஆடியோ உரிமையை பெற்ற ஜி.வி.பிரகாஷ் இசை நிறுவனம்!

‘என்ன விலை’: சாம் சி.எஸ். இசையமைத்த பட ஆடியோ உரிமையை  பெற்ற ஜி.வி.பிரகாஷ்  இசை நிறுவனம்!

தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றி மாஸ் காட்டியுள்ளது ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை நிறுவனம்!

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு கலக்கிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தனது இசை நிறுவனம் மூலமாகப் புதிய படைப்புகளையும் சக இசையமைப்பாளர்களின் தரமான இசைப் பயணத்தையும் உற்சாகத்தோடு ஊக்குவித்து வருகிறார். அந்த வரிசையில், சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி.பிரகாஷின் இசை நிறுவனம் கைபற்றியுள்ளது.

அந்தோணி தாசன் குரலில், உணர்ச்சிகளை அள்ளித் தெளிக்கும் வரிகளோடு வெளியான இப்படத்தின் ‘கடலாடும்’ முதல் பாடல், ரசிகர்களைக் சுண்டி இழுத்து இணையத்தில் செம வைரலாகி வருகிறது!

நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை நிறைவு செய்யும் இந்த வேளையில், நிமிஷா சஜயன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ஏற்கனவே சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்து வருகிறது. ஜெர்மனியின் மேன்ஹெய்ம் கலை & திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், தாதாசாகேப் பால்கே விழாவில் சிறந்த திரைக்கதை என சர்வதேச மேடைகளில் பட்டையைக் கிளப்பி வரும் ‘என்ன விலை’, வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

திரைப் பிரபலங்களின் பாராட்டுகளோடு, ஜி.வி.பிரகாஷின் இசைக்கரங்களும் இணைய, ‘என்ன விலை’ படத்தின் எதிர்பார்ப்பு இப்போது எகிறிக்கொண்டே போகிறது!

Related Posts