இலங்கையைக் கலக்கும் ‘நல்லபடம்’!: திரைக்கு வரத் தயார்!

இலங்கையைக் கலக்கும் ‘நல்லபடம்’!: திரைக்கு வரத் தயார்!

போதை எனும் அரக்கனை ஒழிக்கும் சமூகக் நோக்கத்தோடு களமிறங்கியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’. ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில், இயக்குநர் சி. பிரபுராம் செதுக்கியுள்ள இத்திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் முதன்மை வேடமேற்றுள்ளனர். மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்போது திட்டமிட்டபடி முழுமையாக நிறைவடைந்துள்ளன.

கொழும்பு சூரியன் பண்பலை மேடையில் கோலாகலமாகத் தொடங்கிய இசை வெளியீட்டு கொண்டாட்டம், இலங்கை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் கரங்களால் இசை இருவட்டு மற்றும் ட்ரைலர் வெளியீடாக உச்சமடைந்தது. பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் வரிகளில், சகிஷ்னா சேவியர் இசையில் உருவான பாடல்கள் அமைச்சரின் பாராட்டைப் பெற்றதோடு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியே உலகத் தமிழர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன.

இலங்கை ரசிகர்கள் தந்த பேராதரவால் உற்சாகத்தில் துள்ளும் படக்குழுவினர், வரும் செப்டம்பர் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் தீவிரமாக இயங்கி வருகின்றனர். வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Related Posts