ஜெயராம் – சிம்ரன் ‘கலகல’ காம்போ! புதிய பட பூஜை!
திரையுலகில் மீண்டும் ஒரு மெகா குடும்பக் கொண்டாட்டத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது. ‘தேஜாவு’, ‘வித்தைகாரன்’ வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘White Carpet Films’ சார்பில் கே. விஜய் பாண்டி, ‘Redacted Studios’ சார்பில் ஷான்ஜன் ஜி. உடன் இணைந்து புதிய பிரம்மாண்டப் படத்தை தயாரிக்கிறார். இதனை ‘The Show People’ சார்பில் நடிகர் ஆர்யா வழங்குகிறார்.
‘ராட்சசி’, ‘Kaluveethi Moorkkan’ என அழுத்தமான கதைகளத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் எஸ்.ஒய். கௌதம்ராஜ், இம்முறை ரூட் மாற்றி முழுநீள ஃபன் ரைடராக இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
மாஸ் காட்டும் தலைமுறை மோதல்!
Gen Z தலைமுறை, 2K கிட்ஸ், 90s கிட்ஸ் என மூன்று வெவ்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, ரசனைகள், சிந்தனை மோதல்கள் மற்றும் உறவுமுறைப் புரிதல்களை மிகச் சூடான, சுவாரஸ்யமான நகைச்சுவைத் திரைக்கதையில் படம் பேசவுள்ளது. குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து வயிறு குலுங்கச் சிரித்து மகிழும் வண்ணமான பக்கா ஃபேமிலி ரோம்-காம் என்டர்டெய்னராக இது உருவாகிறது.
ஸ்டார் காஸ்டிங் பட்டாளம்!
குடும்பக் கதைகளின் கதாநாயகன் ஜெயராம் மற்றும் எவர்கிரீன் நாயகி சிம்ரன் ஜோடி சேர, ‘வாழை’ திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பால் மனங்களைக் கொள்ளைகொண்ட குழந்தை நட்சத்திரம் பொன்வேல் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டோர் கலகலப்பைக் கூட்ட இணைந்துள்ளனர்.
திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து!
சென்னையில் நடந்த பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ்ஸ்டார் கதிரேசன், டிரம்பஸ்டிக்ஸ் விவேக், சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா, கார்த்திகேயன் (ஸ்டோன் பெஞ்ச்), இயக்குநர் ஹெச். வினோத், நடிகர் நட்டி எனத் திரைப் பட்டாளமே ஒன்று கூடி படக்குழுவை வாழ்த்தியது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்!
-
இசை: அச்சு ராஜாமணி
-
ஒளிப்பதிவு: தீபக்
-
படத்தொகுப்பு: அருள் ஈ. சித்தார்த்
-
கலை இயக்கம்: மகேந்திரன்
-
பாடல்கள்: கார்த்திக் நேதா
-
நடனம்: அனுஷா விஸ்வநாதன்
-
ஆடை வடிவமைப்பு: எம். முகமது சுபியர்
-
ஒப்பனை: ஷயத் மாலிக் எஸ்.
-
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
மிகவும் உற்சாகமான முறையில் தொடங்கியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

