சீறும் சிங்கம்… சிரத்தில் வாள்.. மிரட்டும் சந்தீப்! ‘கரிகாலா’வின் ‘அடடே’ ஃபர்ஸ்ட் லுக்!
ஷம்பாலா தந்த வெற்றியோடு, இயக்குநர் யுகேந்தர் முனி-சந்தீப் கிஷன் கூட்டணி மீண்டும் கைகோத்திருக்கிறது! ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மகிதர் ரெட்டி, ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிப்பில், பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகிறது ‘கரிகாலா’.
சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டரே இணையத்தைக் கலக்கிய நிலையில், தற்போது மிரட்டலான தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
அடர்ந்த மர்மக் காடு, கையில் மின்னும் வாளோடு குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷன், கூடவே கர்ஜித்தபடி ஓடிவரும் கம்பீரமான சிங்கம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ஒரு மாய உலகத்திற்குள் நம்மை சட்டென்று அழைத்துச் செல்கிறது! நாட்டுப்புறக் கதைகள், வீரம், மர்மம் கலந்த ஒரு பிரம்மாண்ட திரைப் விருந்துக்கு இதுவே பெரிய சான்று.
சந்தமாமா கதைகளின் மாயாஜால உலகில் உத்வேகம் பெற்று, தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா அளவில் உருவாகும் இந்தப் படம், மந்திர சக்திகள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், சிங்கங்கள், ஓநாய்கள் என நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு திரையில் புது உலகத்தைப் படைக்கவுள்ளது.
இந்தப் படத்துக்காக சந்தீப் கிஷன் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்! பிரத்யேக உடைகள், மிரட்டலான உடல்மொழி என ஒரு பவர்புல் போர்வீரனாக அவதாரம் எடுத்துள்ளார்.
‘கரிகாலா’ இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது:
-
முதல் பாகம்: ஜூலை மாதம், இரண்டு தேதி
-
இரண்டாம் பாகம்: அக்டோபர் மாதம், இருபத்தெட்டு தேதி
உணர்ச்சிப்பூர்வமான கதை, கண்ணைப் பறிக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் என சோஷியோ ஃபேண்டஸி பாணிக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுக்க வருகிறது இந்தத் திரைப்படம்.
தொழில்நுட்பக் குழு:
-
இயக்கம்: யுகேந்தர் முனி
-
ஒளிப்பதிவு: பிரவீன் பங்காரி
-
இசை: ஸ்ரீசரண் பாகலா
-
படத்தொகுப்பு: ஸ்ரவண் கட்டிகனேனி
-
தயாரிப்பு வடிவமைப்பு: ராம்சரண் தேஜ் லபானி
-
ஆக்ஷன்: ராஜ்குமார் சிந்தலா
-
ஆடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்
-
தயாரிப்பு: ராஜசேகர் அன்னபிமோஜு, மகிதர் ரெட்டி (ஷைனிங் பிக்சர்ஸ்)
கூடுதல் நட்சத்திரங்கள் மற்றும் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன!
