வேல்ஸ் & வி ஜே சித்துவின் ‘டயங்கரம்’: டீசர், ஆடியோ அப்டேட் விரைவில்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வழங்கும் டயங்கரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
டிராகன் படம் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்ற டிஜிட்டல் திரை நட்சத்திரம் வி ஜே சித்து, கதாநாயகனாக நடித்து இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றல், அட்ராசிட்டி நகைச்சுவை, மனதைத் தொடும் எமோஷன் மற்றும் சுய அடையாளத்தைத் தேடும் பயணம் என ஒரு கலக்கலான பொழுதுபோக்கு விருந்தாக இந்த படம் உருவாகியுள்ளது.
நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ஆதித்யா கதிர் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து கலக்கியுள்ளனர்.
சித்து குமார் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்புப் பணிகளையும், கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.
தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ரசிகர்களை உற்சாகப்படுத்த வரவுள்ளன.
