வதந்தி இரண்டு: மூஸா ராசாவாக சசிகுமார்! பிரைம் வீடியோவில் அதிரடி!
அமேசான் பிரைம் வீடியோ வழங்கும் ‘வதந்தி சீசன் இரண்டு: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரிக்க, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இத்தொடரில் சசிகுமார் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நிகழ்ச்சியில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரசியமான தகவல்கள்:
-
புஷ்கர் – காயத்ரி (தயாரிப்பாளர்கள்): “இயக்குநர் ஆண்ட்ரூஸ் சொன்ன மூஸா ராசா என்ற நேர்மையான காவல் அதிகாரி கதை மிகவும் பிடித்திருந்தது. ‘சுப்ரமணியபுரம்’ முதல் நாள் காட்சியை பார்த்து ரசித்த நாளிலிருந்தே சசிகுமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது, அது இப்போது நிறைவேறியுள்ளது. கதைக்காக பல மாதங்கள் மதுரையில் தங்கி ஆய்வு செய்து திரைக்கதை அமைத்துள்ளார் ஆண்ட்ரூஸ். முதல் சீசன் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பல திருத்தங்களுக்குப் பிறகே இந்த கதையை இறுதி செய்தோம்.”

ஆண்ட்ரூ லூயிஸ் (இயக்குநர்): “எதிர்பார்ப்புகள் நிறைந்த இரண்டாம் சீசனை வெற்றிகரமாக படைப்பதே பெரும் சவால். மதுரை, காரைக்குடி, இராமநாதபுரம், திருச்சி பகுதிகளில் நாற்பத்து மூன்று நாட்கள் தொடர்ந்து பதினெட்டு மணி நேரம் உழைத்து இதை உருவாக்கியுள்ளோம். முதல் சீசன் வெற்றிக்கு காரணமான எஸ்.ஜே.சூர்யாவிற்கு நன்றி. சசிகுமாரிடம் கதை சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார்.”
-
சசிகுமார் (நடிகர்): “மதுரை பின்னணி என்றதும் ரவுடி பாத்திரம் என்றுதான் நினைத்தேன். இதுவரை முப்பது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் யாரும் என்னை போலீஸாக யோசிக்கவில்லை. ஒரு நிரபராதியை காப்பாற்ற போராடும் சாதாரண போலீஸாக இதில் நடித்துள்ளேன். முதல் சீசனுக்கும் இதற்கும் தொடர்பில்லை. இயக்குநர் சொன்னதை அப்படியே செய்தேன்.”
-
விவேக் பிரசன்னா (நடிகர்): “சிறந்த தயாரிப்பாளர்களும் இயக்குநரும் அமையும் போது நடிப்பு இயல்பாக வரும். இயக்குநர் ஆண்ட்ரூஸ் சிறந்த எழுத்தாளர், இத்தொடரின் இறுதி அத்தியாயத்திற்கான கதையை படப்பிடிப்பிற்கு முதல் நாள் தான் கொடுத்தார்.”
-
யஷ்வந்த் (நடிகர்): “புதுமுகமான எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இத்தொடரில் ஒரு பாடலும் பாடியுள்ளேன்.”
அபர்ணா தாஸ் (நடிகர்): “டாடா படத்திற்குப் பிறகு நல்ல கதைகளுக்காக காத்திருந்தேன். இதில் நான் நடித்த சுமையா பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. சசிகுமாருடன் நடிக்க வேண்டும் என்ற பல நாள் கனவு இதில் நனவாகியுள்ளது.”
-
அனகா மருதோரா (நடிகர்): “லீலாவதி பாத்திரத்தில் நடிக்க முதலில் தயங்கினாலும் இயக்குநர் என்னை புரிய வைத்தார். ‘கருடன்’ படத்திற்குப் பிறகு சசிகுமாருடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி.”
-
சிமோன் கே. கிங் (இசையமைப்பாளர்): “முதல் சீசனை விட இதில் மனித உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இம்முறை இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மணி ரோமியோ என்ற புதிய பாடலாசிரியர் அறிமுகமாகிறார்.”
இத்தொடர் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும், உலகளவில் இருநூற்று நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரத்யேகமாக ஒளிபரப்பாகவுள்ளது.
