ஆலி: சாதி, மதம் கடந்து ஜெயிக்கும் காதல்!: ஆகஸ்ட் வெளியீடு!

ஆலி: சாதி, மதம் கடந்து ஜெயிக்கும் காதல்!: ஆகஸ்ட் வெளியீடு!

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியிருக்கும் ஆலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் திரைக்கு வரவுள்ளது

முற்றிலும் புதிய இளைஞர்களின் புதுமையான சிந்தனையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைப்பகுதியில் வாழும் ஒரு பெண்ணின் காதலையும் வாழ்க்கையையும் மையமாக வைத்து உணர்வுபூர்வமாக செதுக்கப்பட்டுள்ளது

குடும்பம் பண்பாடு மதம் போன்ற தடைகளை கடந்து நடக்கும் ஒரு காதல் திருமணமும் அதைத் தொடர்ந்து வரும் விறுவிறுப்பான திருப்பங்களுமே இந்த படத்தின் முதன்மை கதைக்களம்

டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அவரே பாடல்களையும் எழுதியுள்ளார் பல இளம் திறமையாளர்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது