விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” வெளியீடு!
சூர்யா மற்றும் மமிதா பைஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். ஏற்கனவே வெளியான பட்டாம்பூச்சி பாடல் ரசிகர்களின் இதயங்களைச் சூறையாடிய நிலையில், இப்போது படத்தின் அடுத்த அதிரடி விருந்தாக தி வெட்டிங் சாங் வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.
திருமண வீட்டின் குதூகலம், உறவுகளின் பாசம், கட்டுக்கடங்காத உற்சாகம் என அனைத்தையும் அள்ளித் தரும் இந்தக் கொண்டாட்டப் பாடலில் சூர்யாவும் மமிதா பைஜும் தங்களின் துள்ளலான நடனத்தால் திரையைத் தீப்பிடிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்தப் பாடலின் மிகப்பெரிய ஆச்சரியமே நம்ம சூர்யா தனது சொந்தக் குரலில் பாடி அசத்தியிருப்பதுதான். அவரின் காந்தக் குரலும், திரையில் காட்டியிருக்கும் துள்ளல் நடிப்பும் ரசிகர்களுக்குச் செம்ம விருந்தாக அமைந்திருக்கிறது.
ஜி வி பிரகாஷ் குமார் தனது அசுரத்தனமான துள்ளல் இசையால் மீண்டும் ஒருமுறை அனைவரையும் ஆட வைத்திருக்கிறார். கென் கருணாஸ் எழுதிய எதார்த்தமான வரிகள் திருமண விழாவின் மகிழ்ச்சியை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன.
தொடர்ந்து வெற்றிப் பாடல்கள் வெளியாகியிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில், நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தக் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம், வரவிருக்கும் ஆகஸ்ட் மாதச் சுதந்திர தின வாரத்தில் உலகமெங்கும் திரையரங்குகளில் ஆரவாரமாக வெளியாகவுள்ளது.
