‘அவிரா’: முதன்முறையாக Photo Realistic AI -ல் உருவான முழுநீளத் திரைப்படம்!
தொழில்நுட்பம் வளர்ந்துட்டே போற இந்த காலத்துல, AI உலகத்தையே கவவர் பண்ணிட்டு வருவது நாம அறிந்ததுதான். இப்போ சினிமா துறையிலும் AI தன் காலடியை பலமா பதிச்சுட்டது. அந்த வரிசையில், முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான திரைப்படம் தான் இந்த ‘அவிரா’!
படத்தின் அட்டகாசமான சுவாரசியங்கள்:
இயக்குனர் பிரபாகரன்: எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட பிரபாகரன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி AI தொழில்நுட்பத்தில் இயக்கியிருக்காரு.
இந்திய சாதனை: Photo Realistic AI தொழில்நுட்பம் மூலமா ஒரு முழுநீளப் படத்தை உருவாக்கியிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறைங்கிற பெருமை இயக்குனர் பிரபாகரனையே சாரும்!
தயாரிப்பு: லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி சார்பில் கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தைப் பிரமாண்டமாக தயாரிச்சிருக்காங்க.
‘அவிரா’ என்றால் என்ன?: ‘பிரபஞ்சத்தின் பேரொளி’ என்பதுதான் அவிரா என்பதன் பொருள்!
கதைக்களம்: புராண காலத்துக் கதையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான பேண்டஸி கதையாக, பான்-இந்தியா (Pan-India) அளவில் உருவாகியிருக்கு.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்துட்டு வருது. AI சினிமா உலகின் இந்த புதிய முயற்சியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்காங்க!
