பிரபாஸின் ’’ஃபௌசி’… டிசம்பர் 3-ல் ரிலீஸ்!
படைப்பாற்றல் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் இணையும் அந்த பிரம்மாண்ட பான் இந்திய படம்… ‘ஃபௌஜி’! இப்போ மேட்டரே என்னன்னா, படம் வர்ற டிசம்பர் 3-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகப் போகுது!
கூடவே ரிலீஸ் டேட் போஸ்டர் ஒன்னு விட்டிருக்காங்க பாருங்க… பிரபாஸோட அந்த புது லுக் இணையத்தையே அலற விட்டுட்டு இருக்கு!
ரத்தமும் ரணமுமா பிரபாஸ்… போர்க்களத்தில் மரண மாஸ்!
ஒரு கடுமையான போருக்கு அப்புறம், சுற்றிலும் வீரர்களின் சடலங்கள்… புகை மண்டலம்… அதுக்கு நடுவுல ரத்தக்கறையோட, காயங்களோட, தலைகுனிஞ்சு துப்பாக்கியை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கார் பிரபாஸ்.
நீளமான கலைந்த தலைமுடி, அடர்ந்த தாடி, ரத்தம் தோய்ந்த வெள்ளை வேட்டினு இதுவரை யாருமே பார்க்காத கரடுமுரடான ஒரு போர் வீரன் தோற்றம்! வார்த்தைகளே இல்லாம, அந்த ஒரே ஒரு போஸ்டர்ல தியாகம், வலி, தளராத மன உறுதி எல்லாத்தையும் கடத்தியிருக்கார் ’ரெபெல் ஸ்டார்’!
திரையுலகின் பிரம்மாண்ட கூட்டணி!
நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த வரலாற்று பின்னணி கொண்ட அதிரடி காவியத்தில், பிரபாஸுக்கு ஜோடியா இமான்வி நடிக்கிறார். கூடவே மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானுச்சந்தர்னு பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்குது!
தொழில்நுட்ப பலம்!
-
இயக்கம்: ஹனு ராகவபுடி
-
இசை: விஷால் சந்திரசேகர்
-
ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி
-
படத்தொகுப்பு: கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்
-
தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்
-
VFX: ஆர். சி. கமலா கண்ணன்
சாதாரண போர் படமா இல்லாம, பிரம்மாண்ட ஆக்ஷன் + நெஞ்சைத் தொடும் உணர்ச்சிகளோட உலகத் தரமான தொழில்நுட்பத்துல உருவாகியிருக்கு ‘ஃபௌஜி’. டிசம்பர் 3-ல தியேட்டர்கள்ல பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு தூள் பறக்கப் போவது உறுதி!
