ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணியில் மாஸ் சம்பவம்!
தெலுங்கு திரையுலகில் எனர்ஜி நாயகனாக வலம் வரும் ராம் பொதினேனி முதன்முறையாக இயக்குநராக அவதாரம் எடுக்கும் புதிய சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். இந்த புதுமையான கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
திரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களின் பின்னணி இசையில் மிரள வைக்கும் சாம் சி எஸ், இந்த கதைக்கும் தனது அதிரடி இசையால் உயிர் கொடுக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான இம்மாட்டல் படத்தின் காதல் பாடல் மூலம் மெலடியிலும் தூள் கிளப்பிய இவர், தற்போது பல மொழிகளில் பிஸியாக இயங்கி வருகிறார்.
சர்தார் படத்தின் அடுத்த பாகம், கராத்தே பாபு மற்றும் தனுஷ் ஹெச் வினோத் கூட்டணி என வரிசையாக பிரமாண்ட படங்களை கையில் வைத்துள்ள சாம் சி எஸ், தற்போது ராமின் புதிய படத்திலும் இணைந்திருப்பது தென்னிந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இயக்குநராக களம் இறங்கும் ராம் பொதினேனி மற்றும் இசையால் வெளுத்து வாங்கும் சாம் சி எஸ் இணையும் இந்த மாஸ் காம்பினேஷன், திரையரங்குகளில் பெரிய சம்பவத்தை செய்ய காத்துக்கொண்டிருக்கிறது.

