தலைமுறையின் வரலாற்றுப் பதிவு: மகள் திருமண அழைப்பிதழில் அதிசயிக்க வைத்த வ.கௌதமன்!

தலைமுறையின் வரலாற்றுப் பதிவு: மகள் திருமண அழைப்பிதழில் அதிசயிக்க வைத்த வ.கௌதமன்!

திரையுலகில் ‘கனவே கலையாதே’ முதல் ‘சந்தனக்காடு’ வரை தனது படைப்புகளால் முத்திரை பதித்த இயக்குநர் வ.கௌதமன், இப்போது தனது மகளின் திருமண அழைப்பிதழ் மூலமாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்!

வருகின்ற ஜூன் இருபத்தைந்தாம் தேதி, புதுச்சேரி பட்டானூரில் நடைபெறவுள்ள தனது மகள் கௌ.பரஞ்சோதி – க.குணாநிதி திருமணத்திற்காக, வ.கௌதமன் ஒரு வரலாற்று ஆவணத்தையே அழைப்பிதழாக மாற்றியுள்ளார். வழக்கமான பெயர்கள் மட்டுமின்றி, தனது குடும்பத்தின் வேர்களைத் தேடி, ஆறேழு தலைமுறைகளைக் கோர்த்து, ஒரு ‘குடும்ப வரைபடத்தையே’ அழைப்பிதழில் பதித்து அசத்தியுள்ளார்!

யார் அந்த ஆறு தலைமுறைகள்?

சோழர் காலத்துப் பெருமைமிக்க வீர மரபைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களது குடும்ப வேர், அரியலூர் மாவட்டம் ‘சோழன் குடிக்காடு’ கிராமத்தில் தொடங்குகிறது:

  • முதல் தலைமுறை: ஐயா சிதம்பரம் அவர்கள்.

  • இரண்டாம் தலைமுறை: சிதம்பரம் அவர்களின் மகன் அப்பாவு.

  • மூன்றாம் தலைமுறை: அப்பாவு அவர்களின் மகன் அரியமுத்து.

  • நான்காம் தலைமுறை: அரியமுத்து அவர்களின் மகன் வடமலை.

  • ஐந்தாம் தலைமுறை: வடமலை அவர்களின் மகன் வ.கௌதமன்.

  • ஆறாம் தலைமுறை: கௌதமனின் வாரிசுகள் தமிழ் கௌதமன், பரஞ்சோதி மற்றும் மருமகன் குணாநிதி.

ஏன் இத்தனைப் பாராட்டு?

நவீன காலத்தில் பெயர், முகவரி எனச் சுருங்கிவிட்ட அழைப்பிதழ்களுக்கு மத்தியில், தன் முன்னோர்களின் புகைப்படங்களையும், அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் வரலாற்றையும் பதிவு செய்து, இன்றைய தலைமுறைக்குத் தன் வேர்களை அடையாளம் காட்டிய விதம் அதிரடி!

அரசியல் ஆளுமைகள், நீதித்துறை நீதிபதிகள், திரைத்துறை பிரபலங்கள் என ஒட்டுமொத்தப் பெருமக்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தத் தயாராகிவிட்டனர். மரபைத் தாங்கி, பண்பாட்டைக் கொண்டாடும் இந்தத் திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களிலும், சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்திலும் இப்போது ஹாட் டாபிக்!

இந்தத் தலைமுறைப் பயணம், குடும்ப உறவுகளின் மேன்மையைச் சொல்லும் ஒரு அழகான காவியமாகவே மாறியிருக்கிறது.

Related Posts