“கடினமான நாட்களும் நல்ல பாடம் தான் பாஸ்!” – ரக்பி மேடையில் ஸ்ருதி அடித்த  மோட்டிவேஷன் பஞ்ச்!

“கடினமான நாட்களும் நல்ல பாடம் தான் பாஸ்!” – ரக்பி மேடையில் ஸ்ருதி அடித்த  மோட்டிவேஷன் பஞ்ச்!

டாப் ஹீரோயினும் சிங்கருமான ஸ்ருதிஹாசன், சமீபத்துல ஹைதராபாத்ல நடந்த ‘ரக்பி பிரீமியர் லீக்’ சீசன் டூ-வுல சீஃப் கெஸ்ட்டா கலந்துக்கிட்டு செம்ம மாஸ் பண்ணியிருக்காங்க! அங்க நம்ம தேசிய கீதம், ரக்பி லீக் ஆந்தம், அப்புறம் அவங்களோட ஃபேமஸ் ‘சஞ்சாரி’ பாட்டெல்லாம் பாடி, வந்திருந்த கூட்டத்தையே அப்படியே எனர்ஜி பூஸ்ட் பண்ணி அதிர வச்சிருக்காங்க.

அப்போ மேடையில பேசின ஸ்ருதி, “இந்த ரக்பி மேடையில நிக்கிறது செம்ம ஹாப்பியா இருக்கு. கிரவுண்ட் முழுக்க எனர்ஜி சும்மா அள்ளுது! ரக்பியோ இல்ல வேற எந்த கேமோ… சவால்கள் வர்றது ரொம்ப சகஜம் தான். ஆனா, ஒன்னு மேல நமக்கு வெறித்தனமான காதலும், ‘இதைத்தான் சாதிக்கணும்’ங்கிற வெறியும் இருந்தா… நமக்கு வர்ற கஷ்டமான நாட்களும் கூட செம்ம சூப்பரான பாடத்தை கத்துக் கொடுக்கும். நல்ல நாட்கள் நம்மை இன்னும் வேகமா ஓட வைக்கும்” அப்படின்னு செம்ம பாசிட்டிவா பேசியிருக்காங்க.

மேலும், “என் ஃப்ரெண்ட் ராகுல் போஸ் கூப்பிட்டு, இந்த தடவை ரக்பி லீக்ல ‘பெண்கள் டீமும்’ விளையாடுறாங்கன்னு சொன்ன உடனே ரொம்ப பெருமையா இருந்துச்சு. இந்தியால திறமைக்கு பஞ்சமே இல்ல. ஆனா கரெக்ட்டான சப்போர்ட், ஸ்பான்சர், ட்ரெயினிங் கிடைச்சா நம்ம பசங்க வேற லெவல்ல ஜெயிப்பாங்க. அந்த மேடையை இந்த ரக்பி லீக் சூப்பரா அமைச்சு கொடுத்திருக்கு” அப்படின்னு பாராட்டி தள்ளியிருக்காங்க ஸ்ருதிஹாசன்!

Related Posts