வெறும் பேச்சு இல்ல… வீதிக்கு வந்து வேலை! சுற்றுச்சூழல் தினத்தில் அதிரடி காட்டிய நடிகர் சௌந்தரராஜா!

வெறும் பேச்சு இல்ல… வீதிக்கு வந்து வேலை! சுற்றுச்சூழல் தினத்தில் அதிரடி காட்டிய நடிகர் சௌந்தரராஜா!

சுற்றுச்சூழலை காப்பது அரசாங்கத்தின் வேலை மட்டும் கிடையாது, அது நம் ஒவ்வொருவரின் கடமை என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார் நடிகர் சௌந்தரராஜா.

அவருடைய “மண்ணுக்கும் மக்களுக்கும்” அறக்கட்டளை சும்மா பேருக்கு ஆரம்பிக்கப்பட்டது இல்லை என்பதை கடந்த சில வருடங்களாகவே நிரூபித்து வருகிறார்கள். மரம் நடுவது, ஏரி மற்றும் குளங்களை தூர்வாருவது, தூய்மைப் பணிகளை மேற்கொள்வது என இயற்கைக்காக தொடர்ந்து களம் இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக, ஜூன் ஐந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாக வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் செம்ம மாஸ்ஸான ஒரு வேலையை செய்திருக்கிறார்கள். கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் இந்த நேரத்தில், சாலையோரங்களிலும் தெருக்களிலும் வளர்ந்து வரும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி, பராமரிப்பு பணிகளை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள்.

வெப்பம் அதிகரித்து வரும் இந்த சூழலில், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு புரிய வைப்பதற்காகவே இந்த நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். இந்த அதிரடி சமூகப் பணியில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பலரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டு அசத்தியிருக்கிறார்கள்.

Related Posts