கட்டாளன்: விமர்சனம்: ஜென்-சி ஆடியன்ஸை கவரும் அனல் பறக்கும் ஆக்‌ஷன் அதிரடி!

மலையாள சினிமா இப்போ கன்டென்ட்ல மட்டும் இல்ல, ஆக்‌ஷன்லயும் பேன்-இந்தியா லெவலுக்கு மாஸ் காட்டிட்டு வராங்க. அந்த வரிசையில, பவுல் ஜார்ஜ் இயக்கத்துல ஆண்டனி வர்கீஸ் லீட் ரோல்ல நடிச்சு, தியேட்டரை அதிர வச்சிருக்க படம் தான் இந்த ‘காட்டாளன்’.

கதைக்களம்:

காட்டுக்குள்ள யானைத் தந்தங்களை கடத்துற பவர்ஃபுல் நெட்வொர்க்கை வச்சிருக்கார் மாரி (சுனில்). இவரை சுத்தி ஒரு பெரிய வேட்டைக்காரங்க கூட்டமே இருக்கு. இவரை அசைக்கவே முடியாதுன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்கப்போ, மாரிக்கு ஆப்போசிட்டான ‘எடி கேங்’ இவரை வீழ்த்தி கார்டல் கிங் ஆக பிளான் போடுறாங்க. இந்த மாஸ் கேங்ஸ்டர் வார் நடுவுல தான், ஒற்றை ஆளா நின்னு மொத்தப் பிரச்சினையையும் சால்வ் பண்ற ‘ராக்கி பாய்’ ஸ்டைல்ல நம்ம நாயகன் ஆண்டனி மாஸா என்ட்ரி கொடுக்கிறார். அவரோட உதவியால மாரியோட பிசினஸ் நெக்ஸ்ட் லெவலுக்குப் போக, அதுக்கப்புறம் நடக்குற ட்விஸ்ட்களும், அதிரடி ஆக்‌ஷன் யுத்தமும் தான் படத்தோட விறுவிறுப்பான மீதிக்கதை!

படத்தைப் பற்றிய அலசல்:

காட்டுக்குள்ள நடக்குற கேங்ஸ்டர் கதையில, மாரியா வர்ற சுனில் சும்மா மிரட்டியிருக்கார்! இந்த மாதிரி கேரக்டர்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. ‘புஷ்பா’ ஸ்டைல்ல ஒரு செம்ம கெத்தான வில்லத்தனத்தை இதில் காட்டியிருக்கார்.

நாயகன் ஆண்டனிக்கு டயலாக்ஸ் கம்மி தான், ஆனா ஆக்‌ஷன்ல சும்மா அனல் பறக்குது! அவர் வர்ற ஒவ்வொரு சீனும் மாஸ். குறிப்பா, இன்டர்வெல் பிளாக்ல இறந்தவர்கள் உடல்ல தந்திரமா தந்தங்களை கடத்துற காட்சியும், அந்த டைம்ல போலீஸ் வர்றப்போ கொடுக்குற ட்விஸ்ட்டும் தியேட்டர்ல செம்ம சுவாரசியத்தை அள்ளித் தருது!

படம் முழுக்க கேஜிஎஃப் (KGF) ஹாங்கோவர்ல செம்ம ஸ்டைலிஷா, ஸ்லோ மோஷன் ஷாட்களோட ஒரு ஃபேஷன் ஷோ ரேஞ்சுக்கு விஷுவல்ஸை செதுக்கியிருக்காங்க. இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் பிரியர்களுக்கான செம்ம வேட்டை! பில்டப் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் தியேட்டர்ல விசில் பறக்க வைக்குது. ஆக்‌ஷன் சீக்வென்ஸை ரொம்பவே பிரம்மாண்டமா டிசைன் பண்ணியிருக்காங்க.

டெக்னிக்கல் டீம்:

டெக்னிக்கலா படம் டாப் கிளாஸ்! ஒளிப்பதிவு காட்டை ரொம்பவே புதுசா, மிரட்டலா காட்டியிருக்கு. ஸ்டண்ட் மாஸ்டர் ஒவ்வொரு சண்டை காட்சியையும் செதுக்கியிருக்கார். ரவி பசோர் அவரோட சிக்னேச்சர் ‘KGF’ ஸ்டைல் மியூசிக்ல, ஆங்காங்கே தியேட்டரை அப்படியே அதிர வச்சு செம மாஸ் ஏற்றியிருக்கார்.

க்ளாப்ஸ்:

  • பின்னணி இசையும், அட்டகாசமான ஒளிப்பதிவும்!

  • தியேட்டரை தெறிக்கவிடும் அதிரடி சண்டைக்காட்சிகள்!

  • சுனில் மற்றும் ஆண்டனியின் மிரட்டலான ஸ்க்ரீன் பிரசன்ஸ்!

மொத்தத்துல, இந்த ட்ரெண்ட் ஜென்-சி (Gen Z) ஆடியன்ஸை டார்கெட் பண்ணி, செம்ம ஸ்டைலிஷான மேக்கிங்ல, ஆக்‌ஷன் பிளாஸ்ட்டா மிரட்டியிருக்கு இந்த ‘காட்டாளன்’!

Related Posts