‘சட்டென்று மாறுது வானிலை’: விமர்சனம்:
தலைப்பை வைச்சு வெறும் காதல் படம்னு நினைச்சிடாதீங்க. காதலோட, ஆக்க்ஷன், சஸ்பென்ஸ், செண்டிமெண்ட் என எல்லாவற்றையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி சுவாரஸ்யமா கொடுத்திருக்காங்க.
நம்ம ஹீரோ சந்துரு, ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கு ஜாலியான இளைஞன். அதே நேரம் அவரோடு இன்னொரு முகம் சோகமானது. யாருமே இல்லாம, அநாத ஆசிரமத்தில வளர்ந்தவரு. அந்தஆசிரமத்தை நடத்தினவரு திடீர்னு செத்துப்போக, இவர்தான் வேலை செஞ்சு பணம் கொடுக்கிறாரு.
இந்த நிலையில இவருக்கும்அமைச்சரோட மகளான ஜானகிக்கும் இடையே காதல் மலருது. . யாருக்கும் தெரியாம – திடீர்னு – ரெண்டு பேரும் ரகசிய கல்யாணம் பண்ணிக்கிறாங்க.
ஹீரோ சந்துருவுக்கு திடீர்னு வேலை போயிருது. தெரியாத்தனமா ஒரு ரவுடிகிட்ட பணம் வாங்கி வாழ்க்கைய ஓட்டுறாங்க. அப்படியே மலைவாசஸ்தலத்துக்கு ஜாலி டிரிப் போறாங்க.
அந்த காட்டேஜ் ஓனர், அங்கு வர்ற ஜோடிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதை வியாபாரம் செய்யற கொடூர வில்லன். அவன்கிட்ட இந்த ஜோடி சிக்குது.
ஒரு பக்கம் ஹீரோயின் அப்பா துரத்த, ஹீரோயினோட பழைய பாய் பிரண்டும் துரத்த, வட்டிக்கு காசு கொடுத்தவன் துரத்த, காட்டேஜ் ஓனரும் துரத்த… இத்தனை துரத்தல்களை ஹீரோ திண்டாடுறாரு..
இப்படியான இக்கட்டான சூழல்ல, திடீரென ஜானகி காணாமல் போகிறாள். அவளைக் கொன்றதே சந்துருனு பழி விழுது.
இந்தப் பிரச்சினைகள்ல இருந்து ஹீரோ தப்பிச்சாரா.. ஹீரோயின்கூட சேர்ந்தாரா அப்படிங்கிறதுதான் கதை.
ஹீரோ ஜெய்: வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பால ஜொலிக்கிறாரு. குறிப்பா, முதல் பாதியில் தளபதி விஜய் பாணியில் ஸ்டைல், நடனம், ஆக்ஷன் எனப் புதிய முயற்சியில் இறங்கி ரசிகர்களைக் குதூகலப்படுத்துகிறார்.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் அழகுல மட்டுமில்ல.. நடிப்புலயும் நம்மல கவர்றாரு. காதல் காட்சிகள்ல சூடேத்துறாரு. உருக்கமான காட்சிகள்ல நெகிழ வைக்கிறாரு.
யோகி பாபுதான் பாவம், காமெடியனா வில்லனானு தெரியல. ரெண்டையும் சரியா பண்ணல. : சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் மூணு பேரும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறாங்க.
‘கேஜிஎஃப்’ புகழ் ராமச்சந்திரா ராஜு அப்புறம் இன்னொரு வில்லன்.. ஏனோ ரெண்டு பேருமே சோபிக்கல.
ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு நல்லா இருக்கு. கொடைக்கானலோட குளிரை தியேட்டருக்கே கொண்டுவந்துட்டாரு. த்ரில்லர் காட்சிகள்லயும் அசத்தி இருக்காரு.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, ரசிக்கும்படி இருக்கு. குறிப்பா, மாண்டேஜில் ஒலிக்கும் பாரதியாரின் பாடல் வரிங்க, ஸ்ரேயா கோஷல், தேவா குரல்கள் ரசிக்கவைக்குது.
எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன், த்ரில்லர் படத்துக்கு ஏத்தமாதிரி க்ரிப்பா கத்திரி போட்டுக்கார்.
ஏ ஆர் முருகதாஸின் பாசறையில இருந்து வந்த இயக்குநர் பாபு விஜய், குருவோட பாணியிலேயே ஆக்க்ஷன், சஸ்பென்ஸ், காதல் என எல்லா கமர்ஷியல் அம்சங்களையும் பக்காவாக கலந்துகொடுத்துஇருக்காரு. வெறும் சஸ்பென்ஸ் த்ரில்லராக இல்லாம, சமூகத்தில நடக்கிற அதிர்ச்சியான விசயத்தை சொல்லி இருக்கிறது சிறப்பு.
சின்னச் சின்ன லாஜிக் மீறல்க இருந்தாலும், எதிர்பாராத ட்விஸ்ட்டுக, விறுவிறுப்பான திரைக்கதைனு படம் சூடா இருக்கு.
ரேட்டிங்: 3.5/5

