‘சிலந்தி – 2’ : ஆறு மொழிகளில் மிரட்டும் மாளவிகா மேனன்!

‘சிலந்தி – 2’ : ஆறு மொழிகளில் மிரட்டும் மாளவிகா மேனன்!

தமிழ் சினிமாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மூவியாக வந்து பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த “சிலந்தி” படத்தின் இரண்டாம் பாகம் இப்போது பிரமாண்டமாகத் தயார்! ஜி கம்பெனி சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க, முதல் பாகத்தை இயக்கிய அதே ஆதிராஜன் இப்போது பார்ட்-2 க்காக மீண்டும் மெகா கூட்டணி அமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் பான்-இந்தியா த்ரில்லர் மூவியாக இது உருவாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கலக்கி வரும் நாயகி மாளவிகா மேனன், இதில் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் மிரட்டப் போகிறார்.

 முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. ‘லோகா’ மற்றும் ‘காந்தாரா’ படங்களின் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கண்களைக் கவரும் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன.

பெரிய பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் “சிலந்தி-2”, ஆதிராஜன் எழுதி இயக்கும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. டாப் டெக்னீஷியன்களுடன் உருவாகும் இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு செம த்ரில்லர் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Related Posts