‘பள்ளிச்சட்டம்பி’: 1957-ன் சமூக அரசியலைத் தெறிக்கவிட வரும் டொவினோ தாமஸ்!

‘பள்ளிச்சட்டம்பி’: 1957-ன் சமூக அரசியலைத் தெறிக்கவிட வரும் டொவினோ தாமஸ்!

சென்னையில் நடந்த ‘பள்ளிச்சட்டம்பி’ பட விளம்பரச் சந்திப்பு, அனல் பறக்கும் எதிர்பார்ப்புகளுடன் களைகட்டியது! வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகத் தயாராகிவிட்டது.

நூறு நாட்கள் உழைப்பு… ஆயிரக்கணக்கான நடிகர்கள்!

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மின்னல் முரளி நாயகன் டொவினோ தாமஸ், “இந்தக் கதையை 2018-லேயே விவாதித்தோம். 1957-58 காலகட்டத்து கேரளாவின் சமூக அரசியல் பின்னணியில், சில உண்மைச் சம்பவங்களைத் தழுவி செதுக்கப்பட்ட பீரியட் மூவி இது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன், நூறு நாட்களுக்கு மேல் கடினமாக உழைத்து படமாக்கியிருக்கிறோம். டீசருக்கும் பாடல்களுக்கும் கிடைத்த வரவேற்பு, படம் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து இந்த பிரம்மாண்டத்தைக் காண நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன்!” என உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.

மூன்று சகோதரர்களின் கனவுத் தயாரிப்பு!

தயாரிப்பாளர் சரண் பேசுகையில், “மூன்று சகோதரர்களாக இணைந்து நாங்கள் தயாரிக்கும் முதல் படம் இது. 1950-களில் கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்திருக்கிறோம். இந்தப் பெருமிதத்தோடு படத்தை வெளியிடுகிறோம்,” என்றார். நடிகை கயாடு லோஹர், “இது என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரம், நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள வித்தியாசமான கதை,” என நெகிழ்ந்தார்.

சக்ரா பிக்சர்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடும் இந்தப் படம், எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னராக ரசிகர்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை. ஜேக்ஸ் பிஜாயின் இசையும், 1957-ன் பின்னணியும் திரையில் மேஜிக் நிகழ்த்தக் காத்திருக்கின்றன!

Related Posts