பஸில் ஜோசப்பின் ‘ராவடி’ ஆட்டம் தயார்!

பஸில் ஜோசப்பின் ‘ராவடி’ ஆட்டம் தயார்!

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பட்டையைக் கிளப்பப் போகிறது ‘ராவடி’! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், மலையாள ஸ்டார் பஸில் ஜோசப் மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்தது. சென்னை மற்றும் ஒகேனக்கலின் இயற்கை எழில் கொஞ்சும் லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு பக்கா காமெடி என்டர்டெய்னராக அமையப்போகிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வரும் நிலையில், வரும் கோடை விடுமுறைக்கு தியேட்டர்களில் சிரிப்பு மழையை பொழிய வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜன் மார்ட்டினின் இசையும், லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்க, கோடை காலத்தை ஜாலியாகக் கழிக்க ‘ராவடி’ பக்காவான சாய்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Related Posts