சம்பாலா டீமின் ‘மெகா’ பிளான்: சந்தீப் கிஷன் காம்போவில் ஒரு மிரட்டலான பான்-இந்தியா ஃபேண்டஸி வேட்டை!

சம்பாலா டீமின் ‘மெகா’ பிளான்: சந்தீப் கிஷன் காம்போவில் ஒரு மிரட்டலான பான்-இந்தியா ஃபேண்டஸி வேட்டை!

ரெடியா இருங்க மக்களே! தெலுங்கு திரையுலகையே அதிரவைத்த பிளாக்பஸ்டர் ஹிட் ‘சம்பாலா’ படத்தின் அதே மாஸ் கூட்டணியான Shining Pictures மற்றும் இயக்குநர் உகந்தர் முனி மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள். இம்முறை அவர்கள் களம் இறக்குவது தமிழ், தெலுங்கு, இந்தி என முமொழிகளிலும் மிரட்டப்போகும் ஒரு பிரம்மாண்ட சோஷியல் – ஃபேண்டஸி திரில்லர்!

இந்த அதிரடிப் பயணத்தில் நாயகனாக நம் ‘வெர்சடைல்’ ஸ்டார் சந்தீப் கிஷன் இணைகிறார். இதுவரை பார்த்திராத ஒரு பவர்ஃபுல் அவதாரத்தில், செம்ம மாஸான ரோலில் அவர் ஸ்கிரீனை ஆக்கிரமிக்கப் போகிறார். படக்குழு வெளியிட்டுள்ள கான்செப்ட் போஸ்டரே “சும்மா கிழி” ரகம்! சிங்கம் – ஓநாய் மோதல், மர்மமான வாள் என “சில போர்கள் முடிவதில்லை… சில மன்னர்கள் இறப்பதில்லை” என்ற கேப்ஷனோடு ஃபேண்டஸி உலகிற்கு நம்மை அழைக்கிறார்கள்.

சந்தீப் கிஷனின் கேரியரிலேயே மிக அதிக பட்ஜெட்டில், ஹாலிவுட் தர விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் மிரட்டலான கதைகளத்தோடு இப்படம் உருவாகிறது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தங்களது முந்தைய வெற்றியை விட பல மடங்கு பிரம்மாண்டத்தை இதில் காட்டப் போகிறார்கள்.

இந்த ‘மெகா’ ஃபேண்டஸி சாகசத்தின் படப்பிடிப்பு 2026 ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு வெயிட் பண்ணுங்க, ஏன்னா இது சாதாரண படம் இல்ல… ஒரு தரமான ‘சம்பவம்’!