பெரம்பூர் பெப்பர்! பாரி இளவழகன் – ரோஜா கூட்டணியில் ஒரு கலர்புல் கலாட்டா!
‘ஜமா’ படத்தின் மூலம் மொத்தத் தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த பாரி இளவழகன், இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ‘குட் நைட்’, ‘லவ்வர்’ எனத் தொடர் ஹிட் படங்களைக் கொடுத்த மில்லியனர் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேஸில் கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் புதிய ஜாலி படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது வெற்றிகரமாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சூடுபிடித்துள்ளன!
கதையின் நாயகனாக பாரி இளவழகனே நடிக்க, அவருக்கு ஜோடியாக தனுஷ் இயக்கிய ‘NEEK’ புகழ் ரம்யா ரங்கநாதன் களம் இறங்கியுள்ளார். இந்தப் படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ், ‘செம்பருத்தி’ நாயகி ரோஜாவின் அதிரடி ரீ-என்ட்ரி தான்! நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் ஒரு முழுநீளப் பாத்திரத்தில் கலக்க வருகிறார். இவர்களுடன் சேத்தன், ‘பரிதாபங்கள்’ கோபி, இஸ்மத் பானு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து சிரிப்பு விருந்து படைக்க உள்ளனர்.
பரத் சங்கரின் இசை, ஷெல்லி கேலிஸ்ட்டின் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் படம் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது. சென்னையின் இதயப்பகுதியான பெரம்பூரை மையமாக வைத்து, ரத்தமும் சதையுமான மனிதர்களின் கதையை ஒரு ‘பேமிலி என்டர்டெய்னராக’ பாரி இளவழகன் செதுக்கியுள்ளார். அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு (சம்மர் 2026) கோடை விடுமுறையைக் கொண்டாட தியேட்டர்களுக்கு வரவிருக்கிறது. தலைப்பு மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தப் போகின்றன!

