விஜய் சொத்துக்கள் எவ்வளவு? தெரிஞ்சுக்க இதைப் படிங்க!

விஜய் சொத்துக்கள் எவ்வளவு? தெரிஞ்சுக்க இதைப் படிங்க!

ருமானத்தைக் குறைத்துக் காண்பித்ததற்காக,  நடிகரும் தவெக தலைவருமான விஜயக்கு, வருமானவரித்துறை ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இன்று  அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அபராத்ததை விஜய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் இணையம் முழுதும் விஜயின் சொத்து குறித்த விவரங்களையே பலரும் தேடுகிறார்கள்.

அவரது சொத்து விபரங்கள் அறிய ஒரு வழி இருக்கிறது. அதற்கு முன்பாக, அது குறித்து உலவும் செவி வழி தகவல்களை பார்த்துவிடுவோம்.

கடந்த பல வருடங்களாகவே விஜய், ஒரு படத்துக்கான சம்பளமாக நானூறு கோடி ரூபாய் வரை பெறுவதாக, அவரது கட்சியினரே பெருமையாக மேடைகளில் பேசுகின்றனர்.   அப்படி பார்த்தால், விஜயிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்க வேண்டும்.

வெளிப்படையாக தெரிந்தவை,  சென்னை நீலாங்கரையில் மிக பிரம்மாண்டமான கடற்கரை பங்களா. இதன் மதிப்பு சுமார் ₹70 கோடி என சொல்லப்படுகிறது. இதே போல பட்டினப்பாக்கம் பகுதியில மிக காஸ்ட்லியான அபார்ட்மெண்ட்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பிஎம்டபிள்யூ உள்ள பலப்பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் விஜய்க்கு உண்டு.

இப்போது விசயத்துக்கு வருவோம்.

விஜயின் சொத்து விசயங்களை கூடுதலாக அறிவது எப்படி.

வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார் விஜய்.  அப்படி போட்டியிடும் பட்சத்தில், சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.  அப்போது அவரது சொத்துக்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கொஞ்சம் பொறுங்கள்.. வந்தது வந்துவிட்டீர்கள்…  பொதுவாக, வேட்பாளர்கள் எந்த அடிப்படையில் சொத்துக்கள் விபரத்தை அளிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஜென்ரல் நாலேஜ் வளரும்.

தேர்தலில் வேட்புமனுவுடன், படிவம் 26  என்ற உறுதிமொழி பத்திரத்தை அளிக்க வேண்டும். அதில்தான் சொத்து விபரங்களை தர வேண்டும்.

யாருடைய சொத்துக்களைக் காண்பிக்க வேண்டும்?

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வேட்பாளர் தனது சொத்துக்களை மட்டும் அறிவித்தால் போதாது. தקיந்த வெளிப்படைத்தன்மைக்காக கீழ்க்கண்டவர்களின் விவரங்களையும் அளிக்க வேண்டும்:

  • வேட்பாளர் : போட்டியிடும் நபர்.

  • துணைவர் : மனைவி அல்லது கணவர்.

  • சார்ந்துள்ளவர்கள் ): வேட்பாளரின் வருமானத்தை முழுமையாகச் சார்ந்து வாழும் பிள்ளைகள் அல்லது உறவினர்கள்.

2. சமர்ப்பிக்க வேண்டிய சொத்து விவரங்கள்

சொத்துக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விரிவாகக் கேட்கப்படுகின்றன:

அசையும் சொத்துக்கள்  :

  • கைவசம் உள்ள ரொக்கம் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு விவரங்கள்.

  • நிறுவனப் பங்குகள் (Shares), பரஸ்பர நிதிகள் (Mutual Funds) மற்றும் காப்பீட்டுத் தொகைகள்.

  • தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களின் எடை மற்றும் தற்போதைய சந்தை மதிப்பு.

  • வாகனங்கள் (கார், இருசக்கர வாகனங்கள்) மற்றும் அவற்றின் பதிவு எண்கள்.

அசையாச் சொத்துக்கள் :

  • விவசாய நிலங்கள், காலி மனைகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள்.

  • வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள்.

  • இவை வாங்கப்பட்ட தேதி, தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு மற்றும் பூர்வீகச் சொத்தாக இருந்தால் அது குறித்த விவரங்கள்.

3. வருமானம் மற்றும் கடன்கள்

சொத்துக்கள் மட்டுமின்றி, நிதி நிலைமை குறித்த பிற தகவல்களும் அவசியமாகும்:

  • வருமான வரி விவரம்: கடந்த 5 நிதி ஆண்டுகளுக்கான வருமான வரித் தாக்கல்  நகல்கள்.

  • வருமான ஆதாரம்: வேட்பாளர் மற்றும் அவரது துணைவர் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் (தொழில், விவசாயம், சம்பளம் போன்றவை).

  • நிதிப் பொறுப்புகள் : வங்கிகளில் வாங்கிய கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள்.

4. முக்கிய வழிமுறைகள்

  • வெற்றிடங்கள் தவிர்க்கப்பட வேண்டும்: படிவம் 26-இல் எந்தவொரு காலத்தையும்  காலியாக விடக்கூடாது. தகவல் இல்லை என்றால் ‘ஏதுமில்லை’   என்று குறிப்பிட வேண்டும்.

  • உண்மைத்தன்மை: தவறான தகவல்கள் அளிப்பது அல்லது முக்கியமான சொத்துக்களை மறைப்பது வேட்புமனு நிராகரிப்பிற்கு வழிவகுக்கும்.

  • நோட்டரி சான்று: இந்த உறுதிமொழிப் பத்திரம் உரிய முத்திரைத்தாளில் தட்டச்சு செய்யப்பட்டு, நோட்டரி பொது அதிகாரியின் முன்னிலையில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

@@@  விஜய் சொத்து விபரத்தை அறிந்துகொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வேட்பாளர்கள் எப்படி சொத்து விபத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற பொது அறிவு விசயத்தை தெரிந்துகொண்டீர்கள் இல்லையா… அதுதான் நமக்கு மகிழ்ச்சி!

– டி.வி.சோமு

Related Posts