பிப்ரவரி 6 முதல்: மிரட்ட வரும் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’!

பிப்ரவரி 6 முதல்: மிரட்ட வரும் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’!

இந்தியத் திரையுலகில் 23 ஆண்டுகால அசைக்க முடியாத பயணம்! ‘நம்மல்’ படத்தில் அறிமுகமான அந்த துறுதுறு பாவனா, இன்று தனது அபாரமான நடிப்புத் திறமையாலும், விடாமுயற்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்று ‘கிவீன்’ ஆக வலம் வருகிறார். இதோ, இப்போது தனது திரையுலகப் பயணத்தின் மெகா மைல்கல்லான 90-வது படத்தை எட்டிப் பிடித்துள்ளார்!

வெறும் ஆக்சன், காதல் என்று சுற்றாமல், தனது 90-வது படத்திற்காக மிகக் கடினமான மற்றும் ஆழமான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் பாவனா. அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனோமி’   ஒரு வழக்கமான க்ரைம் திரில்லர் கிடையாது. இது ‘பேரலெல் இன்வெஸ்டிகேஷன்’ (Parallel Investigation) எனும் புதுமையான பாணியில், ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற்ற வரும் ஒரு மர்ம வேட்டை!இந்தப் படத்தில் பாவனா, ‘சாரா’ என்ற செம ஷார்ப்பான தடயவியல் நிபுணராக (Forensic Expert) நடித்துள்ளார். புத்திசாலித்தனமும், எமோஷனல் ஆழமும் கொண்ட இந்த கதாபாத்திரம், பாவனாவின் கரியரிலேயே ஒரு சிறந்த மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

‘துருவங்கள் 16’ உள்ளிட்ட படங்களின் மூலம் நம்மை வியக்க வைத்த நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மீண்டும்  கெத்தாக ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது.டி சீரிஸ் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க, பாவனாவின் சொந்த நிறுவனமான ‘பாவனா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ்’ உட்பட பல முன்னணி நிறுவனங்கள் இணைந்து இந்தப் பிரம்மாண்டத்தை உருவாக்கியுள்ளனர்.

மர்மம், முடிச்சுகள், அதிரடி விசாரணை என ஒரு சீட் நுனி அனுபவத்தைத் தர ‘அனோமி’ பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தியேட்டர்களில் ரிலீஸாகிறது!

Related Posts