சாரா: திரை விமர்சனம்
Viswa Dream World சார்பில் ஸ்ரீ பட்டவன் தயாரிக்க, செல்லக்குட்டி இயக்கத்தில் சாக்சி அகர்வால் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள படம்.
டிப்ரண்ட்டான மினி மீல்ஸ் மாதிரி, காதல், காமெடி, சென்டிமெண்ட், அமானுஷ்யம் என எல்லா சுவைகளையும் கலந்து அளித்து இருக்கிறார்கள்.
சிவில் இன்ஜினியரான சாரா, தன்னுடன் பணியாற்றும் இளைஞரை காதலிக்கிறாள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன.
இன்னொரு பக்கம், சாராவின் நண்பனின் தாயார் உடல் நலமின்றி இருக்கிறார். அவர், சாராவை அழைத்து வந்தால் தான் உயிர் பிழைப்பேன் என்கிறார்.
திருமணம் நெருங்கும் நேரத்தில் அங்கு தான் வர முடியாது என்கிறாள் சாரா. ஆனால் அந்த நண்பனோ ஆத்திரமாகிறான். தனது தாய்க்காக எதையும் செய்து, சாராவை கொண்டு செல்ல திட்டமிடுகிறான்.
அடுத்து என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்வதுதான், சாரா திரைப்படம். தான் தாக்கப்பட.. திருப்பி ஆக்ரோசமாக தாக்கும்போது சபாஸ் போட வைக்கிறார்.
காதலனாக விஜய் விஸ்வா… காதல் காட்சிகளில் புகுந்து விளையாடுகிறார்.
வில்லன் மிரட்டல் செல்வா, நேரில் நாயகியிடம் சவால் விடும்போது, நாயகியின் கனவில் வரும்போதும் மிரட்டவே செய்கிறார்.
படத்தை இயக்கி இருக்கும் செல்லக்குட்டியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
சாராவின் அப்பாவாக வரும் பொன்வண்ணன், அம்மாவாக வரும் அம்பிகா, காவல்துறை அதிகாரியாக வரும் அஸ்மிதா ஆகியோர் கவர்கின்றனர்.
கார்த்திக் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவையும், ஜெ.லெஸ்மணனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.
நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லக்குட்டி. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

