ரஜினி கேங்: விமர்சனம்
MISHRI ENTERPRISES சார்பில் பதம் சந்த், அரியன் ராஜ் ஆகியோரோடு இணைந்து தயாரிக்க, எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் ரஜினி கிஷன், துவிவிகா, முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்.
ரஜினி சவுண்ட் சர்வீஸ் என்ற பெயரில் மைக் செட் வைத்திருக்கிறார், ரஜினி கிஷன். அந்த ஊர் பிரசிடென்ட் மகளான துவிவிகாவுடன் காதல். இதை ஊராருக்கு தெரியவர.. ஓடிப் போக முடிவு செய்து கிளம்புகிறார்கள். ஊர்மக்கள் துரத்துகின்றனர். வழியில் கார் ஓட்டி வரும் முனீஸ்காந்த்திடம் லிஃப்ட் கேட்கிறார்கள் . வழியில் கல்கி லிஃப்ட் கேட்க , அவரையும் ஏற்றிக் கொண்டு கிளம்புகிறார்கள்.
அதன் பிறகு கதை டிராக் மாறி, பேய்க்கதையாக உருவாகி ரசிக்க வைக்கிறது.
ரஜினி கிஷன் ஜாலியான இளைஞராக நடித்து இருக்கிறார். அவரது மறதி, அதனால் விளையும் சிக்கல்களும் சுவாரஸ்யம். சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.
நாயகி துவிவிகா அழகாக இருக்கிறார். அழகாக நடித்து இருக்கிறார்.
முனீஸ்காந்த்துக்கு வித்தியாசமான காமெடி வேடம். கார் ஓட்டும்போதே தூங்குவது.. பிரச்சினைகளை புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்வது என ரகளை!
மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
ஜோன்ஸின் இசையில் காதல் மற்றும் குத்துப்பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஏற்காடு மலையின் அழைகை சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ். வினோத் எடிட்டிங் கச்சிதம்.
காதல், காமெடி, பேய், குத்துப்பாட்டு என கலக்கல் மிக்சிங்காக ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி.
ரேட்டிங்: 3.5/5
