விஜய்சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

விஜய்சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ் – வீழான்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.

அந்த அறிக்கையில், “மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ முன்னதாக நவம்பர் 14,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை  வருத்தத்துடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தங்களது தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் தங்களது பொறுமைக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ திரைப்படம் முன்னெப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இருக்கும்!” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Posts