“எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை” என திருமா சொல்வது சரிதானா?

“எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை” என திருமா சொல்வது சரிதானா?
“எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை” என்று பேசி இருக்கிறார்  வி.சி.க. தலைவர், திருமாவளவன்.
இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது முகநூல் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:
“தேனி மாவட்டம் குச்சனூர் கருப்பசாமி கோயிலிலும் மது பாட்டில்களைப் படையலிட்டு நேர்த்திக்கடனை மக்கள் முடிப்பார்கள்.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் மேலக்காடு கிராமத்தில், கருப்பனார் சுவாமிக்கு மதுபானம் மற்றும் சுருட்டு படையல் வைத்து வழிபாடு நடத்துவர்.
நாகர்கோவில் வடலிவிளை பகுதியில் சுடலை மாடன் சாமி கோயிலில் மது படைக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெறுவது  இன்றும் தொடர்கிறது.
புதுச்சேரியில் குயவர் பகுதியில் உள்ள காத்தவராய சாமிக்கு மதுவை சிறப்பு படையல் செய்யும் வழக்கம் இன்றும் உண்டு.
இதெல்லாம் சில உதாரணங்களே. தமிழ்நாட்டில் சிறு தெய்வங்கள் பலவற்றுக்கு மது படையலிடுவது வழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிறகு எப்படி, “எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை” என்கிறார் வி.சி.க. தலைவர், திருமாவளவன்?
( முதல் படம்: தேனிகுச்சனூர் சோனை கருப்பசாமிக்கு மதுபான படையல்..
இரண்டாம் படம்: தனது குலதெய்வமான அங்கனூர் மாயவன் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்து வைத்த திருமாவளவன்..)
டி.வி.சோமு
பி.கு: இது மதுவுக்கோ, திருமாவளவன் அவர்களுக்கோ ஆதரவான/ எதிர்ப்பான கருத்தல்ல. எதார்த்தத்தைச் சொல்கிறேன். விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

Related Posts