“திட்டாதீங்க..!”: ‘மின்மினி’ விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா கோரிக்கை!
ஏ.ஆர்.ரஹ்மானைப்போல அவரது மகன் அமீன், பாடகராக வலம் வருகிறார். இந்நிலையில் அவரது மகள் கதீஜா ஹலிதா ‘மின்மினி’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் தடம் பதிக்கிறார்.
இப்படத்தை ஹலிதாஷமீ்ம் இயக்குகிறார்.
‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர். ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ என அடுத்தடுத்த படைப்புகள் மூலம் நம் கவனத்தை கவர்ந்தார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான், “இதுபோன்ற ஒரு தருணம் நிகழும் என்று நான் நம்பவே இல்லை. இயக்குநர் ஹலிதா ஷமீம் என்னிடம் 2022-லேயே இப்படத்திற்கு இசையமைத்துத் தரச் சொல்லி கேட்டார். நான் ஒபபுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அப்போது நான் இசையமைக்கும் அளவிற்கு தயாராகவில்லை. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாங்கள் சந்தித்தோம். அப்போதும், இந்த படத்திற்கு இசையமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார்.
என்னுடன் இருபவர்கள் நாங்கள் உனக்கு இருக்கிறோம் தைரியமாக இசை அமைக்க ஒப்புக்கொள் என்றார்கள். அதன் பிறகே நான் சம்மதித்தேன்.
திறமையான மற்ற இசையமைப்பாளர்கள் இருக்கும்போது இவரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதனால் வருத்தப்பட்டேன். ஆனாலும் எனது பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டேன். என்னுடன் பணியாற்றியவர்களுக்கும், ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் நன்றி. உங்களுக்கு என்னுடைய பணி பிடிதிருந்தால் ஆதரவு கொடுங்கள். குறை இருந்தால் சொல்லுங்கள். ஆனால் வருத்தப்படும் அளவிற்கு கடினமாக எதையும் சொல்லி விடாதீர்கள்” என்றார்.

