விஷச் சாராயம்: “மக்களே.. உங்களை நீங்களே காப்பாத்திக்குங்க!” : பிரபல இயக்குநர் சுப்ரமணிய சிவா!
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய 37 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி முழுவதும் மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஜி.வி.பிரகாஷ், விஷால், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறையினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில், திருடா திருடி, பொரி, சீடன், வெள்ளையானை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சுப்ரமணிய சிவா தனது கருத்தை முகநூலில் பதிவிட்டு உள்ளார். “விஷச் சாராயத்தில் இருந்து மக்கள்தான், தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார்.
சுப்ரமணிய சிவா அவர்களது பதிவு:
“திரும்ப
பெற முடியாத
இழப்பை சந்தித்த
என் சமூக மக்கள்
அனைவருக்கும்
ஆழ்ந்த இரங்கல்..
காலம் உங்களையும்
மீட்டெடுக்கும்..
2500 ஆண்டுகளுக்கு
முன்னால் எழுதிய
திருக்குறளில்…
கள் உண்ணாமை
என்ற அதிகாரம்
இருக்கிறது என்றால்
குடி என்பது
சங்க காலம் மட்டுமல்ல,
புராண காலமான
கிருஷ்ணனின்
துவாரகை அழிந்தது
மது தான்
மிக முக்கிய காரணம்
என்பது
நீங்கள் அறிந்தது தான்..
ரோம பேரரசு முதல்
கிரேக்க போன்ற
பெரிய பேரரசை எல்லாம்
முடிவுக்கு கொண்டு வந்ததில்
மது முக்கிய பங்கு வகிக்கிறது..
எனவே,
தீமைகள் உங்களை
சுற்றி தான்
வாழ்தாள் முழுவதும் இருக்கும்
நீங்கள்
அவைகளை விலகி
தப்பித்து விடுங்கள்..
பாதிக்க பட்ட பிறகு
ஆறுதலுக்கு
ஒன்றும்
தெரியாதது போல் வருவார்கள்..
அவர்களில் சிலர்
ஏதோ குறைந்த பச்ச அக்கரையில்
வரலாம்..
மற்றது முழுதும் அரசியல்..
எனவே..
நாம் புரிந்து கொள்ள
வேண்டியது..
உங்களை
நீங்கள் தான்
காப்பாற்றி கொள்ள வேண்டும்..
ஜாக்கிரதை..” – இவ்வாறு சுப்ரமணிய சிவா தெரிவித்து உள்ளார்.
