பரத்துடன் மீண்டும் அதிரடி கூட்டணி!: இயக்குநர் சீனு ராமசாமி விருப்பம்!
நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பரத் குறித்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “அடுத்தாக தர்மதுரை போன்ற ஒரு படம் இயக்கவுள்ளேன். அதில் பரத் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய முதல் படத்தின் ஹீரோ பரத். அன்றைய காலகட்டத்தில் நான் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த போது, பரத் தான், எனது கூடல் நகர் கதைக்கு ஓகே சொன்னார்.
அதன் பிறகு தான் நான் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கினேன்.
நான் எந்த படத்திற்கு கதை எழுதினாலும், மனதில் பரத்தை வைத்து தான் எழுதுவேன்.
அடுத்தாக தர்மதுரை போன்ற ஒரு படம் இயக்கவுள்ளேன். அதில் பரத் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
