திரைவிமர்சனம்: கொலை  

திரைவிமர்சனம்: கொலை  

இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர் இணைந்து தயாரித்து உள்ள படம் கொலை. 

சென்னை அப்பாட்மென்ட்டில் ஒன்றில் பிரபல மாடல் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.  காவல் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள ரித்திகா சிங் மற்றும் துப்பறிவாளர் விஜய் ஆண்டனி இருவரும் விசாரிக்க ஆரம்பிக்கின்றனர்.

பலரது மீது சந்தேகம் வருகிறது.. இறுதியில் எதிர்பாராத ஒருவர்தான் குற்றவாளி என்பது கிளைமாக்ஸ்.இதே பாணியில் பல படங்கள் வந்துள்ளன. ஆனால், இந்த படம் சில விதங்களில் வித்தியாசப்படுகிறது.

முதல் விசயம்.. கொலையான பெண்ணே பார்வையாளர்களிடம் பேசும் பாணி.. இது வித்தியாசமாக இருப்பதோடு  ரசிக்கவும் வைக்கிறது.

இரண்டாவது…  கொலை வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு,  கதைக்களமான மாடலிங் துறை பற்றி விரிவாக சொல்லியிருப்பதை ரசிக்க முடிகிறது.சஸ்பென்ஸ் திரில்லர் என்றவுடன் பின்னணி இசை தடதடக்க… கேமரா பரபரக்க டென்சன் ஏற்றுவார்கள். இதில் அப்படி இல்லாமல், இயல்பான கதையோட்டத்துடன் கேமராவும், இசையும் சேர்ந்து பயணிக்கின்றன..

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் கோணங்களும், ஒளி அமைப்பும் ஒரு ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.  க்ரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்களும் சிறப்பு.

விஜய் ஆண்டனியின் இயல்புக்கு ஏற்ற கதாபாத்திரம்.  விபத்தில் மகள் அடிபட்டு சிகிச்சை பெறும் சோகம்.. அதோடு விசாரணை பளு.. என பொருத்தமான முகபாவம் அமைந்துவிட்டது.

காவல் அதிகாரியாக ரித்திகா கவர்கிறார். மீனாட்சி சௌத்ரி ஒரு ரியல் மாடலை கண் முன் நிறுத்திவிட்டார்.வித்தியாசமான கோணத்தில் க்ரைம் த்ரில்லரை அளித்து இருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே. குமார்.

மொத்தத்தில் ஹாலிவுட் பாணியில் ஸ்டைலிஷ்-ஆன க்ரைம் த்ரில்லர்… அனைவரும் ரசிக்கலாம்.

 

  . 

 

 

 

Related Posts