விமர்சனம்: போர் தொழில்
முரட்டுத்தனமான க்ரைம் ப்ரான்ச் அதிகாரி லோகநாதன் (சரத்குமார்) தலைமையின் கீழ், விளையாட்டுப்பிள்ளை பிரகாஷ் (அசோக் செல்வன்) ஜூனியராக சேர்கிறார்.
இந்நிலையில், திருச்சியில் ஒரே மாதிரியான தொடர் கொலைகள் அரங்கேறி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள் இருவரும்.
இந்நிலையில், போலீசாரிடையேயான இன்னர் பாலிடிக்ஸ் முற்றுகிறது. இவற்றை எல்லாம் தாண்டி, சீரியல் கில்லர் தொடர்பான மர்ம முடிச்சுகளை சரத்குமார்- அசோக் செல்வன் இணை எவ்வாறு அவிழ்க்கின்றனர், சீரியல் கொலையாளி யார், அவன் பின்னணி என்ன என்பதை விறுவிறு சைக்காலஜிக்கல் த்ரில்லராக சொல்லி இருக்கிறது ‘போர் தொழில்’.
போலீஸ் கேரக்டருக்கு ஏற்ற தோற்றம், சிடு சிடு குணம் என கவர்கிறார் சரத்குமார். ஜூனியர் அசோக் செல்வனிடம் விறைப்பு காட்டுவது, அவரது சாதுர்யத்தை ஒரு கட்டத்தில் ரசிப்பது, சைக்கோ கில்லருக்கு பாவம் பார்க்க மறுப்பது, வழக்கம் போல் சிறப்பாக நடித்துள்ளார்.
அசோக் செல்வனும் கவர்கிறார். எப்படியாவது சரத்குமாரை இம்ப்ரெஸ் செய்துவிடத் துடிக்கும் காட்சிகளில் கூடுதலாக ரசிக்க வைத்துள்ளார்.
ஹீரோயின் நிகிலா விமல் வந்து போகிறார்.
ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்துக்கு வலுசேர்க்கிறது. கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு இரவு காட்சிகளில் பயமுறுத்துகிறது.
தேடப்படும் சீரியல் கில்லரை காண்பித்துவிட்ட பிறகும் விறுவிறுப்பாக நகரும் இரண்டாம் பாதி அசத்தல். சீரியல் கொலையாளியின் பின்னணி கதையை சரியாகவும் வலுவாகவும் கையாண்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ரசிக்க, பயமுறுத்தவைக்கும் படம்.

