ஃபெமினிஸ்ட்: விமர்சனம்
![ஃபெமினிஸ்ட்: விமர்சனம்](https://tamilankural.com/wp-content/uploads/2024/05/Untitled-19.png)
கதை, கவிதை என இலக்கிய ஆர்வம் கொண்ட இளம்பெண். அவளது படைப்புகளால் ஈர்க்கப்படும் இளைஞன், பின்தொடர்கிறான். நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்திக்கிறார்கள்.. பேசுகிறார்கள். அறிமுகம், நட்பாகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவல்காரணமாக, முழு அடைப்பு அறிவிக்கப்படுகிறது. ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறாள் அந்த பெண்.
அதனால் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்கிறது. கவிஞர் – ரசிகன் என்கிற உறவும், நட்பும் கடந்து, ஈர்ப்பாகிறது. இருவரும் உடலால் ஒன்றிணைகின்றனர். திருணம் செய்துகொள்ளாமல் சேர்ந்ந்து வாழலாம் (லிவிங் டு கெதர்) என தீர்மானிக்கின்றனர்.
காதல், ஊடல் என மகிழ்ச்சியாகவே நாட்கள் நகர்கின்றன. ஆனால் நாளடைவில் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது.
“நீ பெமினிஸ்ட்.. உனக்கு பலருடன் நெருக்கம்” என வார்த்தைகளைக் கொட்டுகிறான் நாயகன். இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது… பிரிகின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
மதியழகன், ஏஞ்சலினா இருவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். இந்தக் கால இளைஞர்களை கண் முன் நிறுத்துகின்றனர். இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் கேபிள் சங்கர்.
பெண்ணியவாதி என்பதை ஒரு ஆணின் பார்வையிலும், பெண்ணின் பார்வையிலும் அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறது படம்.
ஷமந்த் நாக் இசை, முரளி ஸ்ரீதரின் கேமரா, அபிஷேக் க்ரீம் எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு பலம்.
மொத்தத்தில், ‘சந்தோஷமாக வாழு; சந்தோஷமாக வாழ விடு’ என்பதைச் சிறப்பாக சொல்லி இருக்கும் திரைப்படம்.