சீனு ராமசாமி பற்றி பாலா என்ன சொன்னார்?: உண்மையை உடைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் அருளானந்து – மேத்யூ அருளானந்து தயாரிக்க, தேசிய விருது படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’.
இத்திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், ”இயக்குநர் சீனு ராமசாமியை பற்றி இயக்குநர் பாலா குறிப்பிட்டு பேசும் போது, ”சீனு உணர்வுபூர்வமான விஷயத்தை நேர்த்தியாக ரசிகர்களுக்கு கடத்துவதில் வல்லவன்” எனக் குறிப்பிடுவார்.
அதேபோல் இயக்குநர் சீனு ராமசாமி மிகவும் உணர்வுபூர்வமான மனிதர். சிறிய விஷயம் என்றாலும் அதில் தன்னுடைய பார்வையை உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொட்டி தீர்த்து விடுவார். ஆனால் நல்ல மனிதர்.
பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து வெளிவந்த சிறந்த படைப்பாளி. பல தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். அவர் உணர்வுகளையும், உறவுகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தையும் மையப்படுத்தி தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருகிறார்.