“நாங்களும் ரெடி!”: சீனாவுக்கு இந்தியா ‘கட்டுமான’ பதிலடி!

“நாங்களும் ரெடி!”: சீனாவுக்கு இந்தியா ‘கட்டுமான’ பதிலடி!

சண்டிகர்: எல்லை பகுதியில் சீனா, கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவும் கட்டுமான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்திய, சீன எல்லைப் பிரச்னை நீடிக்கும் நிலையில் இந்திய எல்லையில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை சீனா செய்து வருகிறது. இது இந்திய எல்லைகளை சீனா ஆக்கிரமிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சண்டிகரில் எல்லை சாலைகள் அமைப்பின் கட்டுமான பணிகளை லென்டினன்ட் ஜெனரல்  ராஜீவ் சவுத்ரி ஆய்வு செய்தார். இவர் எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநர் ஆவார்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லைப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு  ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.  ஆகவே எல்லை சாலைகள் அமைப்பின் செயல்பாட்டு வேகம் அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.8,000 கோடி மதிப்பிலான 300 எல்லை சாலை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. பாலங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் விமான நிலையங்களும்  ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

அடுத்த 4 மாதங்களில் மேலும் 60 திட்டங்கள் தயாராகி விடும்.

சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது பாதுகாப்பு படையினருக்கானது மட்டுமல்ல. இது தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் உதவும்” என்று இவ்வாறு

Related Posts