“வேலை வெட்டி இல்லாம கட்சி துவங்குறாரு விஜய்!”: பங்கம் செய்த வடிவேலு !

“வேலை வெட்டி இல்லாம கட்சி துவங்குறாரு விஜய்!”: பங்கம் செய்த வடிவேலு !

“வேலை இல்லாததால கட்சி துவங்குகிறார், நடிகர் விஜய்” என்று அர்த்தம் தொணிக்கும்படி கிண்டலாக பேசி கலாய்த்து இருக்கிறார் நடிகர் வடிவேலு.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய  வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ என் அம்மா இறந்து ஒரு வருடம் நிறைவடைந்து உள்ளது. அதற்காக மோட்ச தீபம் ஏற்ற இங்கு வந்துள்ளேன்” என்றார்.

அவரிடம், நடிகர் வடிவேலு கட்சி துவங்கியது குறித்து கேட்கப்பட்டது. உடனே அவர், “அவ்வளவுதான்” என கிண்டலாக சிரித்தார்.

அடுத்து, “நல்லது செய்ய யாரும் வரலாம்” என பாசிடிவாக பதில் சொல்வது போல் பேசிவிட்டு, “டி.ராஜேந்தர், ராமராஜன், பாக்யராஜ்  எல்லோருமே நல்லது செய்யத்தானே வந்திருக்காங்க.. விஜயும் வரட்டுமே…” என்றார்.

மேலும், செய்தியாளர் கூட்டத்தில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரைப் பார்த்து, “ஏன் நீங்க இப்படியே (கண்களில் கைகளை குவித்துக்காட்டி) வீடியோ  எடுத்துக்கிட்டே இருக்கீங்க.. நீங்களும் அரசியலுக்கு வரலாமே..” என்று கிண்டலாக குறிப்பிட்ட வடிவேலு,  இன்னொரு செய்தியாளரையும் பார்த்து, “நீங்க வரலாமே.. நீங்களும் உள்ள (அரசியலுக்கு) வாங்க..   எல்லாரும் வந்து கட்சி ஆரம்பிக்கட்டும்..” என்று கிண்டலாக கூறிவிட்டு, “ஓ.. (உங்களுக்கு) வேலை இருக்கா” என்று நக்கலாக சிரித்தார்.

இதைத் தொடர்ந்து, “அரசியலுக்கு வந்து வெற்றி பெற முடியாதவர்களை பட்டியலிட்ட வடிவேலு, அரசியலில் ஜொலித்த எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகியோரை வடிவேலு குறிப்பிடவில்லை. மேலும், ‘வீடியோ கிராபர் மற்றும் செய்தியாளருக்கு வேலை இருக்கிறது.. ஆகவே கட்சி துவங்கவில்லை’ என்கிற கோணத்தில் சொல்லிச் சிரித்த வடிவேலு, மறைமுகமாக, ‘வேலைவெட்டி இல்லாத விஜய் கட்சி துவக்கி இருக்கிறார்’  என்பது போன்ற கருத்தை வெளியிட்டுச் சென்று இருக்கிறார். இதன் மூலம் நடிகர் விஜயை கடுமையாக கிண்டலடித்து இருக்கிறார்’ என்கிற பேச்சு துவங்கி இருக்கிறது.

இது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

Related Posts