பெண்ணுடன் பாஜக தலைவர் ! டி.வி. தடைக்கு தடை!

பெண்ணுடன் பாஜக தலைவர் ! டி.வி. தடைக்கு தடை!

மும்பை: டிவி சேனலை முடக்க ஒன்றிய அரசு விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

மகாராஷ்டிரா மாநில பாஜக துணை தலைவர் கிரித் சோமையா, முன்னாள் எம்.பி.

இவர் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை லோக்சாகி என்ற மராத்தி டி.வி சேனல் ஜூலை மாதம் 17ம் தேதி ஒளிபரப்பியது. இது போன்ற 36 வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அறிவித்தது. இது அரசியலில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது.

இந்த நிலையில், ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை ஒளிபரப்பை  வேண்டும் என்று  உத்தரவிட்டது.

சேனல் நிர்வாகிகள் இதை  எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம்,  அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.  இதனை தொடர்ந்து மராத்தி சேனல் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது.

Related Posts