திரைப்பட விமர்சனம்: தூக்குதுரை

திரைப்பட விமர்சனம்: தூக்குதுரை

ஒரு சிறிய கிராமம்.  அந்தக் கால வழக்கப்படி, ராஜ வம்சம் தொடர.. ராஜாவுக்கு மரியாதை அளித்து வருகிறார்கள் மக்கள். அந்த  கிராமத்தில் ஒரு கோயில் இருக்கிறது.  கோயில் சிலையின் கிரீடத்தை பாதுகாத்து வருகிறார் ஜமீன்தார். ஆனால் அது போலியான கிரீடம் என்பது தெரிய வருகிறது. உண்மையான கிரீடத்தை  தேடிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.

யோகிபாபுவின் படம் என்பது போன்று  விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் வருவது சில காட்சிகள்தான். அதுவும் பேய் வேடத்தில் வந்து செல்கிறார்.  அதுவும் சிரிப்பே வராத வசனங்களாக கொடுத்து அவரையும் படுத்தி, நம்மையும் நொந்துபோக வைத்துவிட்டார்கள்.

மொட்டை ராஜேந்திரனும் சிரிக்கவைக்கவில்லை.    தொலைக்காட்சி நடிகர் மகேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்து இருக்கிறார்.

ரவிவர்மா கே ஒளிப்பதிவு செய்ய, கே எஸ் மனோஜ் இசையமைத்துள்ளார்.

சுவாரஸ்யமான கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் மெருகேற்ற தவறிவிட்டார் இயக்குநர்.