“புதிய நாடாளுமன்றம் பயமுறுத்துகிறது! தொலைந்து போவீர்கள்!”:    ஜெயராம் ரமேஷ் அச்சம் 

“புதிய நாடாளுமன்றம் பயமுறுத்துகிறது! தொலைந்து போவீர்கள்!”:    ஜெயராம் ரமேஷ் அச்சம் 

புதுடெல்லி: “புதிய நாடாளுமன்றம் பயமுறுத்துகிறது! தொலைந்து போவீர்கள்!” என்று  காங்கிரஸ்  மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. இது ந் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அவர், “பழைய நாடாளுமன்றக் கட்டிடம் வெளிச்சம் நிறைந்ததாக இருந்தது. அதோடு, உரையாடல்களை எளிதாக்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை, சென்ட்ரல் ஹால் மற்றும் தாழ்வாரங்களுக்கு இடையே நடப்பது எளிதாக இருந்தது.

பழைய கட்டிடத்தில், நீங்கள் தொலைந்து போனால், அது வட்டமாக இருந்ததால் மீண்டும் உங்கள் வழியை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

புதிய கட்டிடம், நெருக்கடியும் அச்சமும் சூழ்ந்த ஓர் இடமாக இருக்கிறது. நீங்கள் வழி தவறினால், ஒரு பிரமையில் தொலைந்து போவீர்கள்.

இக் கட்டிடம் வலி நிறைந்ததாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எனது சகாக்களில் பலர் இதையே உணர்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்து உள்ளார்.

Related Posts