“கேரவேன் கதவை மூடாத நடிகை!”: ‘ரணம்’ தயாரிப்பாளர் மது அதிரடி பேச்சு!

“கேரவேன் கதவை மூடாத நடிகை!”: ‘ரணம்’ தயாரிப்பாளர் மது அதிரடி பேச்சு!

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் – அறம் தவறேல்”.

அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்  தயாரிப்பாளர் மது நாகராஜ் பேசியதாவது:

“எல்லோருக்கும் முதற்கண் வணக்கம். நான் எப்போதுமே பேசும் போது, ஒரு Quote சொல்லித் தான் பேசத் துவங்குவேன். ஏனென்றால் எங்கள் டீமில் நாங்கள் எப்போதுமே ஏதாவது Quote சொல்லிக்கொள்வோம், இல்லையென்றால் சொல்லச் சொல்லிக் கேட்போம்.

“TEAM WORK MAKES THE DREAM WORK” என்று அடிக்கடி சொல்வார்கள்.  இதற்கு அர்த்தம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரு வேலையை செய்தோமானால் அது கண்டிப்பாக வெற்றி அடையும்.. ஒரு அணியில் இருப்பவர்கள் ஒரே விசயத்தை வேறு வேறு கோணங்களில் பார்ப்பார்கள். எனக்கு குழு உழைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என் குழு தான் இங்கே இருக்கிறார்கள்.

”ரணம் அறம் தவறேல்” இந்தப் படம் எப்படி துவங்கிச்சிங்குற சம்பவத்தை உங்களோட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கிறேன்.. எனக்கு சினிமாத் துறையில் இருந்து முதன் முதலில் அறிமுகமானவர்கள் பாலாஜி மற்றும் லைன் புரொடியூஷர் செல்வம் இந்த இரண்டு பேர் தான்.. ஒரு நல்ல கதை இருக்கிறது படம் தயாரிக்கிறீர்களா..? என்று கேட்டார்கள். நான் உடனே “அங்கு இருப்பவர்களே படம் எடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நான் வேறு எடுக்க வேண்டுமா…? நான் இங்கு U.K வில் இருக்கிறேன். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் எப்படி எடுப்பது” என்று கேட்டேன்.

தயாரிப்பாளர் மது நாகராஜன்

“எங்களிடம் நல்ல டீம் இருக்கிறது. உங்களுக்கு ஓகே என்றால் உங்களுக்கு எந்த வித சிரமமும் இல்லாத வகையில் படம் தயாரிக்கலாம்” என்று சொன்னார்கள்.

உடனே, “யார் இயக்குநர்…? ஒரு மூன்று நான்கு படமாவது செய்திருக்கிறாரா…?” என்று கேட்டேன்.

எதிர்தரப்பில் அமைதியாக இருந்துவிட்டு பிறகு, “இல்லை அவர் அறிமுக இயக்குநர்” என்றார்கள்.

ஸ்கிரிப்ட் அனுப்பினார்கள். எனக்குப் படிக்கும் பழக்கம் இல்லை என்பதால் வாய்ஸ் நோட் அனுப்பச் சொன்னேன். அனுப்பினார்கள். கேட்டேன். பின் என் மனைவி கேட்டார். என்னை மீண்டும் கேட்கச் சொன்னார்கள்,. கேட்கும் போது அதில் பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களை Address செய்யும் தன்மை இருப்பதை உணர்ந்தேன். என் மனைவியிடம் அதைக் கூறியவுடன், “தயாரிக்கலாம்” என்றார்.

பிறகு, “எந்த ஹீரோ ஒத்துக் கொள்வார்” என்று கேட்டேன். ஏனென்றால் ஹீரோ ஒத்துக் கொள்ளாமல் ஒரு புராஜெக்ட்டை துவங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பின்னர், “வைபவ் அவர்களுக்கு கதை பிடித்திருக்கிறது” என்று கூறினார்கள். உடனே இரண்டு தினங்களுக்குள் சென்னை வந்து அவரை சந்தித்தேன். அவர் மிகச் சிறந்த மனிதர், மிகச் சிறந்த நண்பரும் கூட, அன்றிலிருந்து ஸ்பாட்டில் நாங்கள் ஒன்றாகத் தான் சாப்பிடுவோம். அவரின் கதாபாத்திரம் மிக வித்தியாசமான கதாபாத்திரம் என்பதை எல்லோரும் சொல்லிவிட்டார்கள்.

என்னைப் பொருத்த வரை வைபவ் அவர்களுக்கு இப்படம் கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்து நாயகிகள் என்றவுடன் யாரை தேர்ந்தெடுப்பது  என்ற கேள்வி வந்தது. ஏனென்றால் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. தான்யா ஹொப் சொன்னது போல் இதுவரை அவர் நடித்திராத போலீஸ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி நந்திதா ஸ்வேதா உடல்நலக் குறைபாட்டால் இன்று வர இயலவில்லை. அவரின் வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் எல்லோருக்கும் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கின் போது ஆக்ஷன் காட்சிகளில் கூட சிறப்பாக நடித்திருக்கிறார்,. ஒரு முறை காயம் ஏற்பட்ட போது பேக்-அப் சொல்ல வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால் வெறும் முதல் உதவி செய்துவிட்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்தார்.அவரின் கேரவன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு, படியில் அமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி. சரஸ் மேனன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் எப்போதும் சிரித்துக் கொண்டே அவரது வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். அதில் முதன்மையாக இயக்குநர் ஷெரீஃப். ஒரு கதை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்கின்ற அறிவு ஞானம் அவருக்கு இருக்கிறது. பிறகு ஒளிப்பதிவாளர் பாலாஜி. அவர் ஒரு சூப்பர் ஹியூமன், ஒரு ஷாட் எடுக்கும் போது பத்து நிமிடம் வீணடிப்பார். ஆனால் அவர் ஏன் அந்த பத்து நிமிடம் எடுத்துக் கொண்டார் என்பது அந்த ஷாட்டைப் பார்க்கும் போது, அந்த பத்து நிமிடம் வொர்த் என்று தோன்றும். லைன் புரொடியூசர் செல்வத்தை நம்பி சொத்தைக் கூட எழுதி வைக்கலாம். அவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர். பிறகு கலை இயக்குநர் மணி மொழியன். அவரை நான் அப்பு என்று தான் கூப்பிடுவேன். மழை என்று பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷன் செட்டப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு நன்றி.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் உதய் என்ன நடக்க முடியாது என்று நினைப்போமோ அதை எளிதாக நடத்திக் காட்டிவிடுவார். பிரணதி சைல்ட் ஆர்டிஸ்ட், மற்றும் அவரின் பெற்றோருக்கும் நன்றி. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்து முன் வந்ததற்கு நன்றி. இப்படம் உருவாக காரணமாக இருந்த என் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் நன்றி. இப்படத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் சக்திவேலன் அவர்கள் என் வாழ்வில் வந்தார்கள். He Means lots to me, அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் இருக்கிறார். இது தொழில் தாண்டிய நட்பு.” என்று பேசினார்.

Related Posts