வெற்றிகரமான ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸின் சீசன் 2 பூஜையுடன் தொடங்கியது!

வெற்றிகரமான ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸின் சீசன் 2 பூஜையுடன் தொடங்கியது!

தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த, பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக ஆஹா ஓடிடி தளம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும், ஆஹா தமிழ் ஓடிடி தளம், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்த ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸின், அடுத்த பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

ஒரு ஐடி அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை அனைவரும் ரசிக்கும் வகையில், மிக அற்புதமாக கூறிய “வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸ், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்த வெப் சீரிஸ் இளைஞர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்ததோடு, ஆஹா தமிழ் தளத்திற்கு பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது குறிப்பிடதக்கது.

மக்களின் மனம் கவர்ந்த இணையத் தொடராக உருவெடுத்த, ‘வேற மாறி ஆபீஸ்’ தொடரின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக, அத்தொடரின் இரண்டாம் சீசனை பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது ஆஹா நிறுவனம்.

முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய களத்தில், கூடுதல் சுவாரஸ்ய அம்சங்களுடன் ‘வேற மாறி ஆபீஸ் – வெப் சீரிஸின் சீசன் 2’ உருவாகவுள்ளது, கடந்த சீசனின் தொடர்ச்சியாக, நிஷா (ஜனனி) தலைமையில் இவர்கள் அனைவரும் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்குகிறார்கள். அந்நிறுவனம் சந்திக்கும் சவால்கள், பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகள் போன்றவற்றை எப்படி ஒருசேர சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்வதே இந்த தொடரின் கதை.

கனா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகாந்த் தயாரிக்கும் ‘வேற மாறி ஆபீஸ் – சீசன் 2’ தொடரை ஜஷ்வினி இயக்குகிறார். இதில், முதல் சீசனில் முதன்மை வேடத்தில் நடித்த RJ விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டான் ஆகியோருடன் லொள்ளு சபா மாறன், ஜனனி அசோக்குமார், ஜெயசீலன், ரவீணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஷ்யாமா, சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம், பப்பு, ஸ்வப்னா, தாப்பா, விஷ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.சென்னையில் கடந்த 12-06-2024 ஆம் தேதி இந்தத் தொடரின் பூஜை, படக்குழுவினர், தொடரில் நடிக்கும் நட்சத்திரங்களுடன், ஆஹா தமிழ் தளத்தின் குழுவினரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

முதல் சீசனை விட இரண்டு மடங்கு ஆச்சரியங்களுடன், அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன், மிக உயர்ந்த தரத்தில் உருவாக்குவதில் ஆஹா தமிழ் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

‘வேற மாறி ஆபீஸ்’ -வெப் சீரிஸ் சீசன் 2 வுக்கு, சத்யா ஒளிப்பதிவு செய்ய, ராகவ் இசையமைக்கிறார். கலை இயக்குநராக நர்மதா பணியாற்ற, படத்தொகுப்பாளராக விக்கி பணியாற்றுகிறார்.

இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. சீரிஸ் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related Posts